சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற ’களவாணி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விமல், தொடர்ந்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தார்.
ஆனால், அவரது சமீபத்திய படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது மீண்டும் சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி 2’ வில் நடித்திருக்கும் விமல், இந்த படத்தை ரொம்பவே எதிர்ப்பார்க்கிறார்.
வெற்றிப் படத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விமல், ‘களவாணி 2’ வெளியாகி வெற்றிப் பெற்றுவிட்டால், தனது அடுத்தடுத்த படங்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே, களவாணி 2 படத்திற்கு விநியோகஸ்தர் ஒருவர் தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர, நீதிமன்றமும் 6 வாரம் காலம் தடை விதித்தது. ஆனால், அந்த விநியோகஸ்தருக்கும் தனக்கும், களவாணி 2 படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை, என்று நீதிமன்றத்தில் இயக்குநர் சற்குணம் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது களவாணி 2 படத்தின் மீதான தடையை நீதிமன்றம் நீக்கிவிட்டது.
‘களவாணி 2’ படத்தை நம்பியிருந்த விமல், படத்தின் மீதான தடை நீங்கியதால் நிம்மதியடைந்திருக்கிறார். விமல் மட்டும் அல்ல, ‘களவாணி 2’ படம் இயக்குநர் சற்குணத்திற்கும் ஒரு ரீ எண்ட்ரி படமாக அமைவதோடு, தமிழ் சினிமாவில் உதயமான லேட்டஸ்ட் ஸ்டாரான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரையும், நடிகராக மக்களிடம் கொண்டு சேர்க்கும் படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் சில உப்புமா படங்களில் நடித்து, நடிப்பு பற்றிய அனுபவத்தை பெற்ற பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், இனி அப்படியான படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, சின்ன வேடமாக இருந்தாலும், தரமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவருக்கு ‘களவாணி 2’ கிடைக்க, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.
படத்தில் அரசியல் வில்லனாக தனது அதிரடியை காட்டியிருப்பவர் ‘களவாணி 2’ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகிவிடுவார் என்றும் படக்குழுவினர் கூறி வருகிறார்கள்.
இப்படி பலரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்த இருக்கும் ‘களவாணி 2’ விரைவில் வெளியாக உள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...