தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலிக்க தொடங்கியதும் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மேலும், தனது காதலுக்கு அப்பா கமல்ஹாசன், அம்மா சரிகா ஹாசன் இருவரும் சம்மதம் தெரிவித்ததால், மைக்கேலை திருமணம் செய்துக்கொள்ளவும் இருந்தார்.
இதற்கிடையே, மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘லாபம்’ படத்தில் ஒப்பந்தமானார். மேலும், சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனும், அவரது காதலர் மைக்கேலும் பிரிந்துவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
காதல் முறிவு குறித்து மைக்கேல் கார்சேல், சமூக வலைதளத்தில் ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்துடன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”உலகத்தின் இரண்டு வெவ்வேறு மூலைகளில் தான் வாழ்க்கை நம்மை வைத்துள்ளது, அதனால் நாம் தனியாக தான் வாழ்க்கை பாதையில் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். அந்த இளம் பெண் எப்போதும் எனது சிறந்த துணையாக இருப்பார். எப்போதும் நல்ல நண்பராக நான் அவருக்கு இருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...