Latest News :

’ஜாக்பாட்’ மூலம் ஜோதிகாவுடன் சேர்ந்து ஹாட்ரிக் அடிக்கப் போகும் சூர்யா
Wednesday May-01 2019

சூர்யா ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. 

 

ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றிபெற்றுள்ளன. இப்போது 2டி எண்டெர்டெயின்மெண்ட்டில் சூர்யா தயாரிக்கும் படத்தில் ஜோதிகா  மூன்றாவது முறையாக  நடிக்கிறார். படத்தின் பெயர் 'ஜாக்பாட்'. 

 

ஜோதிகா திருமணத்திற்குப் பின் கதையின் நாயகியாக வலம் வந்த 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல பெயரையும் நல்ல லாபத்தையும் சம்பாதித்து இருக்கின்றன. அந்த வரிசையில் ஜோதிகா நடித்து, நடிகர் சூர்யா தயாரிக்க, கல்யாண் இயக்கியுள்ள இந்த “ஜாக்பாட்” படமும் இணையும் என்று தெரிகிறது. சென்னையில் நடிகர் சூர்யா க்ளாப் அடித்து துவங்கி வைத்த இப்படத்தின் படப்பிடிப்பு  முழு வீச்சில் நடைபெற்று சிறப்பாக முடிந்துள்ளது. படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் இயக்குநர் கல்யாண் ஏற்கெனவே 'குலேபகாவலி' படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். இந்தப்படமும் காமெடியை அடித்தளமாக கொண்டது தான். மேலும் நடிகர் சூர்யா இப்படத்தைத் தயாரித்திருப்பதால் நிச்சயம் ஒரு நல்ல மெசேச் இருக்கும் என்றும் நம்பலாம். 

 

இந்த 'ஜாக்பாட்' டிற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.  படத்தின் எடிட்டர் விஜய். இப்படத்தில் இணை தயாரிப்பாளராக ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்துள்ளார்.

 

இத்திரைப்படம் 2டி எண்டெர்டெயின்மெண்ட்-ன் 11-வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

4728

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery