தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் அஜித், தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டு பயணிக்கிறார்.
1990 ஆம் ஆண்டு ‘என் வீடு என் கணவன்’ படம் மூலம் சிறிய வேடம் ஒன்றில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தவர், 1993 ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ படம் மூலம் ஹீரோவாக கோடம்பாக்கத்திற்குள் நுழைந்தவர், தற்போது தலையாக பவனி வந்துக்கொண்டிருக்கிறார்.
நடிப்பு மட்டும் இன்றி, கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், குட்டி விமானங்களை வடிவமைத்தல் என்று பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் அஜித், இன்று தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி அஜித் பற்றி பல தகவல்கள், பல தரப்பில் இருந்தும் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை வெளிவராத தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
தனது பட விழாக்களிலேயே கலந்துக் கொள்வதை தவிர்க்கும் அஜித், தற்போது பத்திரிகையாளர்களை கூட சந்திக்காமல் நிராகரித்து வருகிறார், என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்து வரும் நிலையில், அவர் சாமானியர் ஒருவரை நெகிழ வைத்த சம்பவம் பற்றிய தகவல் தான் இது.
அதாவது, சினிமா பிரபலங்கள் பற்றிய சர்ச்சையான செய்திகளை போட்டுவிட்டால், சம்மந்தப்பட்டவர்களின் பி.ஆர்.ஓ-க்களோ அல்லது மேனஜர்களோ போன் செய்து புலம்புவார்கள், ஏன் சில நேரங்களில் சம்மந்தப்பட்ட நடிகர், நடிகைகள் கூட நேரடியாக நிருபர்களுக்கு போன் செய்வதும் சில நேரங்களில் நடக்கும். ஆனால், அவர்களைப் பற்றி நல்லவிதமாகவோ அல்லது அவர்கள் குறித்த சிறப்பான பேட்டி என்று எதாவது போட்டுவிட்டால், ஒருவர் கூட சம்மந்தப்பட்ட நிருபருக்கு பாராட்டோ அல்லது நன்றியோ தெரிவிப்பதில்லை, என்ற நிலை தான் தற்போதுவரை நீடிக்கிறது.
ஆனால், ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுடன் நட்பு பாராட்டி வந்த அஜித், அவர்களை அவ்வபோது சந்திப்பதி வழக்கமாக வைத்திருந்தது மட்டும் அல்ல, அவர்களின் பணி குறித்து பாராட்டவும் செய்திருக்கிறார்.
அந்த வகையில், முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் அவரது பிறந்தநாளுக்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றை பார்த்துவிட்டு சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு போன் செய்து அஜித் பாராட்டியிருக்கிறார்.
ஆம், 6 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தின் பிறந்தநாளுக்காக வினோத் என்ற நிருபர், முன்னணி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளார். இதில், அஜித்தின் இளமை காலத்தின் நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது போல நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில், அஜித்துடன் கார் ரேஸியில் ஈடுபட்டவர், அஜித்துடன் பணியாற்றியவர், என்று அஜித்தின் இளமை காலத்தில் அவருடன் பழகியவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை பார்த்து வியந்த அஜித், உடனே நிருபர் வினோத்துக்கு போன் செய்து, தனது இளமை காலத்தில் பழகியவர்கள் சிலரை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை, அப்படிப்பட்டவர்களை எப்படியோ கண்டுபிடித்து, இப்படி ஒரு நிகழ்ச்சியை தயாரித்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, அவரை பாராட்டவும் செய்திருக்கிறார்.
மேலும், வினோத்தின் குடும்பம் குறித்து விசாரித்த அஜித், ”குடும்பத்திற்காக மட்டுமே வாழ வேண்டும்” என்று அறிவுரையும் கூறியிருக்கிறார்.
ஊடகத்துறையில் தனது ஆரம்பக்கால பயணித்தின் போதே, மாஸ் ஹீரோ அஜித்தின் நேரடி பாராட்டை பெற்ற வினோத் ரொம்பவே நெகிழ்ந்து போயிருக்கிறார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...