அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் அவ்வபோது மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி ரசிகர்களுடன் அஜித் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த மோதலுக்கு காரணம் ‘தல’ என்ற வார்த்தை தான். அஜித்துக்கு மட்டுமே தலை இருப்பது போலவும், மற்றவர்கள் எல்லாம் முண்டமாக சுற்றுவது போலவும், அவரது ரசிகர்கள் அஜித்தை தல...தல...என்று அழைக்கிறார்கள்.
இதற்கிடையே, கிரிக்கெட் வீரர் டோனியையும் அவரது ரசிகர்கள் தல என்று அழைக்கிறார்கள். தற்போது நடைபெற்று வரும் ஐபில் போட்டிகளில், சென்னையில் நடக்கும் போட்டியில் ரசிகர்கள் தல...தல....என்று டோனியை அழைப்பது ஸ்டேடியத்தையே அதிர வைக்கிறது.
சமீபத்திய போட்டியின் போது டோனியிடம், ரசிகர்கள் தல என்று அழைப்பது குறித்து கேட்டதற்கு, “தல என்பது சென்னை ரசிகர்கள் எனக்குக் கொடுத்த செல்லப்பெயர். அதனால் அந்த பெயர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான்” என உருக்கமாகப் பதில் அளித்துள்ளார்.
ரோனியின் இந்த பதிலால் கோபப்பட்ட அஜித் ரசிகர்கள், ”அடே அம்பி…., ரெண்டு ஸ்டேட் இல்ல இந்தியாவுக்கே தெரியும் தலன்னா அஜித் ஒருத்தர் தான், ஆந்திராவுக்கு பக்கத்துலதான் ஜார்கண்ட் ஸ்டேட் இருக்கு.
இதுல கூத்து என்னன்னா மொத்த தமிழ்நாடும் என்னை #தல ன்னு கூப்பிடுதுன்னு டோனி சொன்னது தான். சென்னை பார்டர தாண்டி வேலூர், மதுரை, தேனின்னு போயி இத சொல்லிடாதய்யா @msdhoni.. செதச்சிருவானுங்க.” உள்ளிட்ட பல வகையில் டோனியை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அஜித் ரசிகர்களின் இத்தகைய பதிவுக்கு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ள டோனி ரசிகர்கள், “அன்பில் அஜித் ரசிகர்களே, அஜித்த கொண்டாடுங்க வேணாங்கல, அது உங்க விருப்பம். ஆனா, தல பட்ட பிரச்சனைல டோனிய கீழ்த்தரமாக விமர்சிக்காதிங்க. ஏன்னா, 2ஸ்டேட் தள்ளி போனா அஜித்த யார்னே யாருக்கும் தெரியாது. ஆனா, டோனிய இந்தியா முழுசும் மட்டுமல்ல, உலகம் முழுசுமே தெரியும்!” என்று கூறி வருகிறார்கள்.
டோனி ரசிகர்களின் பதிவுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுக்க, அதற்கு டோனி ரசிகர்களும் பதில் சொல்ல, இப்படியே இவர்களது மோதல் சமூக வலைதளங்களில் வலுத்துக் கொண்டே போகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...