80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சில்க் ஸ்மீதா, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை மட்டும் இன்றி சினிமா பிரபலங்களையே கிரங்கடித்த சில்க் ஸ்மீதாவின் வாழ்க்கை மிகவும் சர்ச்சையானதாகவே இருந்தது.
இந்த நிலையில், சில்க் ஸ்மீதாவை சீரழித்த ஹீரோக்கள், என்ற தலைப்பில் நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, அவ்வபோது சில பிரபலங்களின் ஆதாரங்களை வெளியிடப் போவதாக கூறி வருவதோடு, வேறு சில நடிகைகளின் பாலியல் உறவு குறித்தும் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், அவர் சில்க் ஸ்மீதாவை பல ஹீரோக்கள் சீரழித்திருப்பதாக தெரிவித்திருப்பதோடு, ”பல முன்னணி ஹீரோக்கள் அவரை உடலுக்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டனர். இந்த சைக்கோக்களை எப்படி லெஜெண்ட் என்று கூப்பிட முடியும். சினிமா அரசியல் காரணமாக அவரை இழந்துவிட்டோம். உங்களை மறக்கமாட்டோம் சில்க் ஸ்மிதா.” என்று பதிவிட்டுள்ளார்.
அதே சமயம், சில்க் ஸ்மீதாவை சீரழித்த முன்னணி ஹீரோக்கள் யார்? என்ற பட்டியலை ஸ்ரீரெட்டி அந்த பதிவில் குறிப்பிடவில்லை.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...