தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷால், நடிகரும் இயக்குநருமான கே.நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவர்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டார்கள்.
தனது மனைவியை விவாகரத்து செய்தது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷ்ணு விஷால், அதற்கான காரணத்தை அறிவிக்காததோடு, அது குறித்து பேசவும் மறுத்து வந்தார். இதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிகை ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவ, அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கூறியிருக்கிறார்.
தனது துறையில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்த தான், பணியின் காரணமாக நடிகைகளுடன் சகஜமாக பழகியதால் தான் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதை மனைவி புரிந்துக்கொள்ள தவறியதாலேயே விவாகரத்து வரை சென்றதாகவும், கூறியிருக்கிறார்.
இது குறித்து விஷ்னு விஷால் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம், எனது திருமணம். ஆனால், அதுவும் இப்போது இல்லை. என்னால் இன்னும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த ஒரு நபர். அப்போது இந்த பேட்டியைக்கூட தந்திருக்க மாட்டேன். எப்போதும் நம்பிக்கை குறைவாகவே இருப்பேன். என்னை, சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த்ததே இல்லை. எனது அப்பாவைப் பார்த்து, புத்திசாலியான என் சகோதரியைப் பார்த்து, இவர்களை எல்லாம் என் வாழ்வில் மிஞ்சவே முடியாது என்றெல்லாம் நினைப்பேன்.
இந்த ஆளுமை என் வளர்ச்சியைத் தடுப்பதாக நம்பியதால், எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.
‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, 'நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை' என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், செய்துதான் ஆகவேண்டும். என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன்.
நான், எனது துறையில் மிகக் கடினமாக உழைத்துள்ளேன். பலருக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மன ரீதியாக வருத்தத்தில்தான் இருக்கிறேன். ஆனால், வேலை எனது கவனத்தைத் திசை திருப்புகிறது. நான், எனது மகனைப் பற்றி நினைக்கிறேன். அவரையும், அவரது அம்மாவையும், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான்.” என்று தெரிவித்துள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...