பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கனடா நாட்டு குடியுரிமையை பெற்றதால், அவர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. இந்த விஷயம் அறிந்த மக்கள் அவரை சமூக வலைதளங்கள் வாயிலாக விமர்சித்தனர். மேலும், இந்தியாவில் சம்பாதிக்க மட்டும் விருப்பம் கொண்ட அக்ஷய் குமார், இந்தியராக இருக்க விப்பமில்லையோ! என்றும் விமர்சித்தனர்.
பிறகு இந்த சர்ச்ச இகுறித்து விளக்கம் அளித்த அக்ஷய் குமார், தன்னிடம் கனடா நாட்டின் குடியுரிமை இருதாலும், எனது இதயம் இந்தியாவில் தான் இருக்கும், நான் இந்தியாவில் மட்டுமே வரி செலுத்துகிறேன், என்றும் கூறினார்.
இந்த நிலையில், அக்ஷய் குமாருக்கு கிடைத்தது போல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கனடா நாட்டின் சிறப்பு குடியுரிமை கிடைத்திருக்கிறது.
கனடா நாட்டின் மேயர் ரஹ்மான் என்பவர் கனடா நாட்டின் குடியுரிமையை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுக்க முன் வந்த போது அதை நாகரிகமாக மறுத்த ரஹ்மான், ”எனக்கு குடியுரிமை கொடுக்க முன் வந்த கனடா மேயருக்கு நன்றி. நான் அவருக்கு என்றும் கடமைப்பட்டவனாக உள்ளேன். ஆனால், நான் தமிழகத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனது குடும்பம், என் நண்பர்கள், என் மக்கள் அனைவரும் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். நீங்கள் இந்தியாவிற்கு அடுத்தமுறை வருகை தரும்போது எங்கள் இசைப்பள்ளிக்கு வருகை தாருங்கள். மேலும் இந்தியாவும் கனடாவும் இணைந்து இசை நிகழ்ச்சிகளை அதிகமாக வழங்க ஆர்வமுடன் உள்ளேன்.” என்று கூறினார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிலால் அவரது நாட்டுப்பற்றை பாராட்டிய கனடா மேயர், அவர் குடியுரிமையை மறுத்தாலும், அவரது பெயரை ஒண்டோரியாவில் உள்ள ஒரு சாலைக்கு சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...