'கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்' சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீனியர் நடிகை சச்சு இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்..
படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.
ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். அதன்பின் படத்தில் நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை.
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சச்சு கூறுகையில், “எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம்தொட்டு கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இப்போதுள்ள இயக்குநர்கள் எனக்கென்று ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறி என்னை அழைப்பதையே மிக பெருமையாக நினைக்கிறேன். இப்போதைய கலைஞர்கள் எங்களுக்காக என எதையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் அவர்களுக்கு ஏற்றாற்போல் என்னை மாற்றிக்கொள்கிறேன்.
அதனால் தான் இந்த படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரம் என்றதும் என்னால் எளிதில் ஒப்புக்கொள்ள முடிந்தது. இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது. வயதானாலும் கூட பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் இந்த கதாபாத்திரம் போன்றே இப்போதும் கூட நிஜத்தில் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன், அதைத்தான் இந்தப்படத்தில் பிரதிபலித்திருக்கிறேன்.
பெண்கள் எந்த வயதில் இருந்தாலும் தங்கள் அழகை பேணிக்காப்பதில் அக்கறை காட்டவேண்டும். அதற்கு பியூட்டி பார்லர் தான் போக வேண்டுமென கட்டாயமில்லை. இயற்கையான முறையிலேயே தங்களது அழகை வெளிப்படுத்தலாம். இந்த விஷயத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தை எங்கே எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கிறது. சில தவறான இடங்களில் அதை பயன்படுத்தும் போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன அதன் பிரச்சனைகள் என்ன என்பதை தான் இந்த பேரழகி ‘ஐ எஸ் ஓ’ படத்தில் முக்கியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜயன். அறிவியல் கதை என்றாலும் அதை சீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து ஒரு பாட்டி பேத்தியின் கதையாக அனைவரும் பார்க்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜயன்.” என்கிறார்.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...