நடிகர்களுக்கு பட வாய்ப்பு குறைந்தால் அரசியலில் குதிப்பது போல, நடிகைகள் பட வாய்ப்பு குறைந்தால் சீரியலில் நடிக்க தொடங்கி விடுவார்கள். ஆனால், தற்போது நிலை மாறிவிட்டது. நடிகர்களுக்கு நிகராக நடிகைகளும் தற்போது அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்கள்.
குஷ்பு, நக்மா, ரோஜா, ஜெயப்பிரதா, ஹேமா மாலினி உள்ளிட்ட பல நடிகைகளை உதாரணமாக சொல்லலாம். அதேபோல், அரசியல் கட்சிகளும் நடிகர், நடிகைகளை தங்களது கட்சிக்குள் இணைக்கு ஆர்வம் காட்டி வருகிறது. இதில், சமீபகாலமாக பா.ஜ.க தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதிலும், தமிழகத்தில் காலூன்றுவதற்காக அக்கட்சி தமிழ் சினிமாவை சேர்ந்த பலரை கட்சியில் இணைத்து வருகிறது.
அந்த வகையில், பா.ஜ.க-வில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இணைந்தார். அவருக்கும் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதிலும் கட்சியில் தொடர்ந்து நீடித்தவர், தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “வெறும் வாக்குவாதமும் மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல மாறிவிட்டது. வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.
இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்துவிட்டது. அதற்காக வருத்தப்படுகிறேன். சினிமாவைவிட அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான் கடைசியாக கிடைத்திருக்கிறார்கள். என்னால், நாள் முழுவதும் நடித்துக்கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. இப்போதைக்கு அரசியலை இன்னும் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். அரசியலில் தீவிரமான இறங்க இது நேரல் இல்லை. இப்போதைக்கு நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப்போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு” என்று பதிவிட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்கு காயத்ரி ரகுராமை பா.ஜ.க அழைக்காததால் தான் அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...