கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆர் முதல் பலர் படமாக்க முயற்சி மேற்கொண்டாலும், யாருடைய முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தற்போது, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க இயக்குநர் மணிரத்னம் தீவிரமாக உள்ளார்.
ஏற்கனவே, இதற்கான முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்ட நிலையில், ”பல கோடி செலவாகும் எதற்கு ரிஸ்க்”, என்று பலர் அவருக்கு அறிவுரை கூறியதால் தனது முயற்சியை கைவிட்டுவிட்டு காதல் படங்களை எடுக்க தொடங்கினார்.
தற்போது மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மணிரத்னத்திற்கு லைகா நிறுவனம் கைகொடுத்த நிலையில், நடிகர் நடிகைகளிடம் பேசி தேதியும் வாங்கிவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக மணிரத்னம் ரூ.1000 கோடி பட்ஜெட் கேட்டதால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம், படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கிவிட்டது. இதனால், ஜியோ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் மணிரத்னம் பேசி வருகிறாராம்.
மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பாகுபலி’யே ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக ரூ.1000 கோடி பட்ஜெட் கேட்பதால், இதுவரை எந்த தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்க முன்வரவில்லையாம். தற்போது வரை பேச்சுவார்த்தையிலேயே இருப்பதால், அநேகமாக இம்முறையும் மணிரத்னத்தின் முயற்சி தோல்வியில் தான் முடியும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...