38 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகராக பயணித்துக் கொண்டிருப்பவர் சாமிநாதன். 1985 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘நான் சிகப்பு மனிதன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான சாமிநாதன், சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்தவர். நாசர் இவருக்கு ஜூனியராம்.
திரைபப்டக் கல்லுரியில் படிப்பை முடித்துவிட்டு பல நிறுவனங்களில் வாய்ப்பு தேடி அலைந்த சாமிநாதனுக்கு ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், காமெடியனாக நடிக்க வேண்டும் தனது ஆசையால் ஹீரோ வாய்ப்பை நிராகரித்தவர், தற்போது வரை தனது காமெடி பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
சந்தானத்துடன் இவர் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவையாகும். தற்போது வரை 650 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சாமிநாதன், ஒரு நடிகராக மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு தந்தையாக தனது மகளால் மனவருத்தம் அடைந்திருக்கிறார்.
60 வயதாகும் சாமிநாதனுக்கு இன்னும் பைக் ஓட்டத் தெரியாதாம். இதனால் அவர் என்றைக்கும் கவலைப்பட்டதில்லையாம். ஆனால், ‘விஸ்வாசம்’ படம் பார்த்ததும், தனது மகளை அப்படி உட்கார வச்சு பைக் ஓட்ட முடியலையேனு, சாமிநாதம் ரொம்பவே வருத்தப்பட்டாராம்.
இதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...