’பீஸ் பார் சில்ரன்’ (PEACE FOR CHILDRN) என்ற அமைப்பை தொடங்கியிருக்கும் லதா ரஜினிகாந்த், அதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சாலை ஓரம் வசிக்கும் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்ததோடு, குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், ’பீஸ் பார் சில்ரன்’ (PEACE FOR CHILDRN) குழுவினரின் நடவடிக்கைகள் மற்றும் குழந்தை பாதுகாப்பில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விரிவாக பேசினார்.
நிகழ்ச்சியில் லதா ரஜினிகாந்த் பேசுகையில், “தற்போது அண்மையில் தமிழ்நாட்டில், இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், ஆதரவற்று இருப்பதும், கொல்லப்படுவதும் இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை எங்களால் வரிசை படுத்தி எண்ண முடியவில்லை. இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை. நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும், ஆதரவற்ற குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை.
உங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது நம் சமுதாயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் வர வேண்டும்.
அந்தக்காலத்தில் ஒருவர் வீட்டில் இருக்கும் குழந்தையை பற்றி பக்கத்துக்கு வீட்டு ஆட்களுக்கு தெரியும். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தார்கள். அப்பொழுது ஒரு பாதுகாப்பு வளையம் இயற்கையாகவே இருந்தது. தற்போது அந்த மாதிரியான எண்ணங்கள் மிக குறைவாகவே உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு, அக்கறை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும். ஊடகங்கள் நினைத்தால் இந்த செய்தியை, விழிப்புணர்வை லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்து செல்லலாம்.
குழந்தைகள் பெற்றோர்களின் கண்காணிப்பில் உள்ளது ஒருவருடைய கண்பார்வையிலேயே இருக்க வேண்டும். எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்ல கூடாது. நம் இந்திய கலாச்சாரமே ஒருவருக்கொருவர் பங்கிட்டு வாழ்வது தான். இந்த குழந்தை பாதுகாப்பிலும் அப்படிப்பட்ட எண்ணம் நம் அனைவருக்கும் வர வேண்டும்.
தற்போது டெக்னலாஜி பெரியதாக வளர்ந்து விட்டது. பெரும்பாலான மக்கள் செல்போனுக்கு அடிமை ஆகிவிட்டார்கள். இதனால் கூட குழந்தைபாதுகாப்பில் கவனக்குறைவு ஏற்படுகிறது.
எங்கள் பீஸ் பார் சில்ரன் (PEACE FOR CHILDRN) அமைப்பின் மூலம் குழந்தை கல்வி, குழந்தை காணாமல் போகுதல், குழந்தைகளுக்கான பல பிரச்சனைகளை தீர்வு கொண்டு வருகின்றோம்.
இந்த மாதிரியான விஷயங்களை செய்தித்தாள்கள் மூலமாகவோ, அல்லது கிடைக்கும் தகவல்களை வைத்து எங்கள் PFC (PEACE FOR CHILDREN ) அமைப்பின் குழுவினர்கள் அந்தந்த இடத்திற்கு சென்று உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் பல தகவல்கள் முழுமையாக வராமல், தொலைபேசி எண்ணோ அல்லது தொடர்பாளர் முகவரியோ இல்லாமல் பல செய்திகள் கிடைக்கிறது. எங்கள் PFC அமைப்பு மகாராஷ்டிரா, புனே போன்ற பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் நிறுவியுள்ளோம். குழந்தைகள் பிரச்சினை சம்மந்தப்பட்ட எல்லா செய்திகளும் வெளியே தெரிவதில்லை. அப்படி தெரியவராத செய்திகளை அந்தந்த ஊர்களில் இருக்கும் எங்கள் PFC அமைப்பையோ அல்லது எங்களது TOLL FREE எண்னை அழைத்து தகவலை பகிரலாம்.
நீங்கள் உங்கள் ஊரில் இது போன்று PFC அமைப்பை உருவாக்கி குழந்தைகளுக்காக பாதுகாப்பு வளையத்தை உருவாக்க நினைத்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை நாங்கள் சொல்ல தயாராக இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...