சினிமா படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் மது போதையில் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்கள் சிலர், படப்பிடிப்பு தளத்திலேயே மது அருந்துவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர்கள் தான் இப்படி என்றால், சில நடிகைகளும் அவ்வபோது மது போதையில் கலாட்ட செய்யும் சில சம்பவங்களும் அவ்வபோது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட பிரபல ஹீரோயின் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். அதை தொடர்ந்து அவர் மது போதையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்து, தொடர் பணி சுமை காரணமாக அவர் உடல் சோர்வடைந்ததால், வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார் என்று விளக்கம் கொடுத்தார்.
இந்த நிலையில், ’ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான டாப்ஸி, மது போதையில் கலாட்டா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாப்ஸி நடிக்கும் இந்தி படங்கள் தொடர் வெற்றி பெறுவதால், அவர் தென்னிந்திய மொழிப் படங்களை கண்டுக்கொள்ளாமல் பாலிவுட்டிலேயே தனது முதல் கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
தற்போது அவர் விக்கி கெளஷலுக்கு ஜோடியாக நடித்து வரும் ‘மன்மர்ஸியான்’ (Manmarziyaan) படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பார்ட்டி நடந்துள்ளது. அதில் மது அருந்திய டாப்ஸிக்கு போதை அதிகமாகி அவர் கலாட்டா செய்துள்ளார்.
அந்த ஓட்டலின் கார்டன் பகுதியில் படுத்துக் கொண்ட டாப்ஸி, “இன்று இரவு இங்கு தான் தூங்க போகிறேன்” என்று கூறி பிடிவாதம் பிடித்துள்ளார். அவருடன் இருந்த ஹீரோ விக்கி கெளஷல் எவ்வளவு சொல்லியும் அறைக்கு செல்லாமல், கார்டனில் இருந்தபடியே டாப்ஸி கலாட்டா செய்திருக்கிறார். இதனால் அவருடன் இருந்த ஹீரோ ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.
பிறகு ஓட்டல் ஊழியர்களின் உதவியோடு, டாப்ஸியை சமாளித்த விக்கி கெள்சல், அவரை அறைக்குள் அழைத்து சென்றாராம்.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...