’2.0’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தினை எடுக்க இருந்த ஷங்கர், அதற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கும் தயாரான நிலையில், படத்தின் பட்ஜெட் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தால் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்தது.
இதற்கிடையே, படத்தின் பட்ஜெட் மிகப்பெரியதாக இருந்ததால் படத்தை தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் திடீரென்று பின்வாங்கியது. இதையடுத்து வேறு சில நிறுவனங்களை இயக்குநர் ஷங்கர் அனுகிய போது, படத்தில் ஹீரோயினாக நடிக்க ஓகே தெரிவித்த நயன்தாராவும் விலகியதோடு, கமல்ஹாசனும் தேர்தல் களத்தில் பிஸியானார். இதனால், மற்ற நிறுவனங்களும் ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க தயங்கியது.
‘எந்திரன்’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘இந்தியன் 2’ தயாரிப்பது குறித்து ஷங்கருடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், கமல்ஹாசன் தொடர்ந்து திமுக-வை விமர்சித்து வருவதால், அவர்களும் இறுதியில் நோ சொல்லிவிட்டார்களாம்.
இயக்குநர் ஷங்கரின் ஒரே நம்பிக்கையாக இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தற்போது பின் வாங்கிவிட்டதால், ’இந்தியன் 2’ படம் தயாரிப்பாளர் கிடைக்காமல் ட்ராப் ஆவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.
மேலும், ஷங்கர் இளைஞர்களை வைத்து காதல் கலந்த கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கும் திட்டத்திற்கும் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...