சரத்குமார் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, ‘பரம்பரை’, ‘சமுத்திரம்’ போன்ற படங்களின் கதை, வசனம் எழுதியதோடு, ‘முதல் சீதனம்’, ‘சிம்மராசி’ ஆகிய படங்களை இயக்கியிருப்பவர் ஈரோடு செளந்தர்.
குடும்பக் கதைகளை செண்டிமெண்டோடு சொல்வதிலும், வசனங்கள் மூலம் கதைக்கு உயிர் கொடுப்பதிலும் தேர்ந்தவரான இயக்குநர் ஈரோடு செளந்தர், ’சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களுக்காக சிறந்த கதையாசிரியர் மற்றும் ‘சிம்மராசி’ படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசு விருது பெற்றிருக்கிறார்.
படம் இயக்கி பல வருடங்கள் ஆனாலும், பல வெற்றிப் படங்களின் கதை விவாதத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஈரோடு செளந்தர், தனது பேரனை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.
‘அய்யா உள்ளேன் அய்யா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் மாணவர்களின் எதிகாலத்தை நிர்ணயிக்கும் 10 ம் வகுப்பு பள்ளி படிப்பின் முக்கியத்துவத்தையும், அதில் கவனம் செலுத்தாமல் தடம் மாறும் மாணவர்களின் எதிர்காலம் எப்படி கேள்விக்குறியாகிறது, என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது.
10 ம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10 ம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருக்கும் என்பதால், தனது பேரன் கலிபேஷை நாயகனாக இயக்குநர் ஈரோடு செளந்தர் அறிமுகப்படுத்துகிறார். இன்னொரு எதிர் மறை நாயகனாக தனது தம்பி மகன் பால சபரீஸ்வரனையும் களம் இறக்குகிறார். கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர்களுடன் மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி ஆகியோர் நடிக்கிறார்கள்.
சந்துரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மகேந்திரன் இசையமைக்கிறார். வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 4 ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...