தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2009 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் கரண் தேர்வாகியுள்ளார். ‘மலையன்’ படத்திற்காக கரணுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது குறித்து கூறிய கரண், “ஒரு நடிகருக்கு விருது என்பது பல படிகள் ஏறிச் சென்று உயர்ந்த உணர்வைத் தரும். அந்த வகையில் மலையன் படத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைத்து இருக்கிறது . அந்தப் படத்தில் நடிக்கும் போது சிரமப் பட்டுப் பல சவால்களைச் சந்தித்து நடித்தேன். அந்த வலி நினைவுகள் எல்லாம் விருது என்கிற மகிழ்ச்சி மூலம் காணாமல் போய் விட்டது . இப்போது புத்துணர்வும் புது பலமும் பெற்றுள்ளதாக உணர்கிறேன். அந்தப் படத்துக்காக என்னை சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள தமிழக அரசு க்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த விருதுக்கு என்னைப் பரிந்துரை செய்தவர்களுக்கும் விருது தேர்வுக்குழுவினருக்கும் என் நன்றி. இவ்விருதுக்கு காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநருக்கும் மனமார்ந்த நன்றிகள். இவ்விருதை படத்தில் பணிபுரிந்த அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.” என்றார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...