நடிகர் விஷால் தலைவராக இருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, தமிழக அரசு சார்பில் தனி அதிகாரியாக என்.சேகர் என்பவர் நியமிக்கப்பட்டதோடு, இனி தயாரிப்பாளர் சங்கம் குறித்த அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பர் என்றும் அரசு அறிவித்தது.
இதையடுத்து, தனி அதிகாரி நியமத்திற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி என்.சேகர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு என 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறார். அதில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தனி அதிகாரி சேகரின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கதிரேசன், இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்த்தனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக வழக்கு உள்ளபோது தற்காலிக குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு அதிகாரம் இல்லை, என்று அந்த தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...