இயக்குநர் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன் போன்ற பிரபல இயக்குநர்களிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆர்.குழந்தை ஏசு தயாரித்து இயக்கும் படம் ‘அந்த நிமிடம்’.
‘சிங்க மச்சான் சாலி’, ‘லீடர்’, ‘கோத்ரா’ போன்ற சிங்களப் படங்களை இயக்கியிருக்கும் குழந்தை ஏழு, ‘அந்த நிமிடம்’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சில தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடித்த ருத்ரா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நொஷின் என்பவர் நடிக்கிறார்.
சிங்கள மொழிப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங், இப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ்சினிமாவில் அறிமுகமாகிறார். பல சிங்கள மொழிப் படங்களில் நடித்தும், இயக்கிய வருமான சன்ன பெராரா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
தங்கையா மாடசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ’சண்டிவீரன்’,’கோலிசோடா’, ‘கடுகு’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைத்திருக்கிறார். சஜித் ஆண்டர்சன் பின்னணி இசையமைத்திருக்கிறார். ‘மைனா’, ‘கும்கி’, ‘தொடரி’, ‘கயல்’ போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்த எல்.வி.கே.தாஸ் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.ஆர்.முருகன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, ரேகா நடனம் அமைக்கிறார். செல்வராஜ் கலையை நிர்மாணிக்க, அருண்பாரதி பாடல்கள் எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பாளர் பணியை பெருதுளசி பழனிவேல் கவனிக்கிறார். ஆர்.குழந்தை ஏசு, மஞ்சுளா டி சில்வா ஆகியோர் தாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜய முரளி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநார் குழந்தை ஏசு, “ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது ‘அந்த நிமிடம்’ திரைப்படம்.
ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை, பொள்ளாச்சி, இலங்கையில் நூரேலியா, ராமர் சீதா கோவில், ராவணக் கோட்டை போன்ற பல பகுதிகளிலும் நடத்தப்பட்டிருக்கிறது.” என்றார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...