’சீமராஜா’ வை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தப் படமாக ’Mr.லோக்கல்’ வெளியாக இருக்கிறது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்த எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார்.
வரும் மே 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி மற்றும் தன்வி பிலிம்ஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
இயக்குநர் எம்.ராஜேஷ் படங்கள் என்றாலே காமெடி எந்த அளவுக்கு நிறைந்திருக்கிறதோ அதே அளவுக்கு டாஸ்மாக் காட்சிகளும் நிறைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த படத்தை பொருத்தவரை இதுவரை ராஜேஷ் இயக்கிய படங்களுக்கும் இப்படத்திற்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும். காரணம், சிவகார்த்திகேயனுக்காக இயக்குநர் ராஜேஷ் தனது பாணியையே மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே டாஸ்மாக் காட்சிகள், பெண்களை கேலி செய்வது, திட்டி பாட்டு பாடுவது போன்றவற்றை தவிர்த்துவிட்டு, சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான குடும்ப காமெடி படமாக பண்ணுவோம், என்று சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜேஷிடம் கேட்டுக்கொண்டாராம். அதன்படி, தனது பாணியை மாற்றிக் கொண்ட ராஜேஷ், இப்படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு இப்படத்தை இயக்கியிருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், நயன்தாராவின் வேடமும் ஹீரோவுக்கு நிகரானதாகவே இருக்குமாம். அதேபோல், ரோபோ சங்கர், சதிஷ், யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோரது காமெடி காட்சிகள் வயிறு புன்னாகும் அளவுக்கு சிரிக்க வைக்கும் விதத்தில் வந்திருக்கிறதாம். இவர்களுடன் சிவகார்த்தியேனும் இணைந்து செய்திருக்கும் காமெடி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் என்றாலே சிறுவர்களுக்கு பிடித்த நடிகர் என்பதால், இப்படம் கோடை விடுமுறைக்கு ஏற்ற ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கும், என்று நம்பிக்கை தெரிவித்த தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா, இக்கட்டான சூழலில் நான் சிக்கிக்கொண்டிருக்கும் போது தான் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வந்தார். அவர் என் தயாரிப்பில் நடித்தது, எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது, என்றும் கூறினார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...