முன்னணி தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த சொர்ணமால்யா, மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் திடீரென்று சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டு, நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார்.
இந்த நிலையில், தான் படங்களில் நடிக்காதது எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் இல்லை, எனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நானே தான் வேண்டாம் என்று நிராகரித்தேன், என்று சொர்ணமால்யா கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய சொர்ணமால்யா, “சினிமாவில் நடிகையாக ஜெயிக்க வேண்டும் என்று நான் என்றுமே நினைத்ததில்லை. டிவியில் பிரபலமானாலும் எனக்கு என்று நிறைய கமிட்மெண்ட் இருந்தது. பரதநாட்டியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். பி.எச்.டி பட்டம் பெற்றேன். அதை தொடர்ந்து எனக்கு எதை செய்ய விருப்பமோ அதை செய்துக் கொண்டு பயணித்தேன்.
நான் தொடர்ந்து படங்கள் நடிக்காமல் போனது எனது தோல்வியல்ல, நானாகத்தான் பல படங்களை நிரகாரித்தேன். இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாரதிராஜா, லிங்குசாமி, வசந்த் என பல முன்னணி இயக்குநர்கள் என்னை நடிக்க அழைத்தும் நான் முடியாது என்று கூறிவிட்டேன். இப்போதும் கே.எஸ்.ரவிகுமார் என்னை பார்த்தால், அதிகமான படங்களை நிராகரித்த நடிகை என்றால் அது சொர்ணமால்யாவாக தான் இருக்கும் என்று கூறுவார்.” என்று தெரிவித்துள்ளார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...