ஆர்.ஜே-வாக புகழ்பெற்ற ஆர்.ஜே.பாலாஜி, காமெடி நடிகராக சில படங்களில் சொதப்பினாலும் பல படங்களில் மக்களை சிரிக்க வைத்திருக்கிறார். திடீரென்று சமூக சேவையில் ஆர்வம் காட்டி வருபவர், கிரிக்கெட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் பேசி சர்ச்சையிலும் சிக்கினார்.
இதற்கிடையே, தொடர்ந்து பல படங்களில் காமெடி நகராக வலம் வந்த ஆர்.ஜே.பாலாஜி, காமெடி நடிகராக வளர்ந்து வந்த நிலையில், ‘எல்.கே.ஜி’ படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே அரசியல் தலைவர்களையும், அரசையும் கலாய்த்து நடித்தவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம். காமெடி ரோல் என்று அவரிடம் கதை சொல்ல இயக்குநர்களை திரும்பி கூட பார்க்காமல் அவாய்ட் செய்கிறாராம்.
சரி போகட்டும், என்று அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க நினைக்கும் இயக்குநர்கள் அவரிடம் கதை சொல்ல சென்றால், ”முதலில் சம்பளத்தை பற்றி பேசிவிடலாம், பிறகு கதையை பற்றி பேசலாம்” என்று சொல்பவர், சம்பளமாக கேட்கும் தொகையால், அவரிடம் கதை சொல்ல செல்லும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தலைதெறிக்க ஓடிவிடுவதாக கோடம்பாக்கத்தில் தகவல்கள் கசிந்து வருகிறது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...