அட்லீ இயக்கத்தில், தனது 63 வது படத்தில் நடித்து வரும் விஜயின் அடுத்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இளம் இயக்குநர்கள் சிலரிடம் விஜய் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதில், முக்கியமானவராக ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். இவர் கார்த்தியை வைத்து இயக்கியுள்ள ‘கைதி’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், இவர் சொன்ன சஸ்பென்ஸ் மாஃபியா கதை ஒன்று விஜய்க்கு பிடித்துவிட்டதாம். உடனே ஓகே சொன்ன விஜய், எனது அடுத்தப் படத்தின் இயக்குநர் நீங்க தான், என்றும் கூறினாராம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விஜயின் 64 வது படம் என்பதால், ‘தளபதி 64’ என்று ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், ‘தளபதி 64’ படத்திற்காக பிரபல கல்வி நிறுவனமான வேல்ஸ் யூனிவர்சிட்டி நிறுவனர் ஐசரி கே.கணேஷுடன் விஜய் கைகோர்த்திருக்கிறார். ‘தளபதி 64’ படத்தை வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் ஐசரி கே.கணேஷ் மற்றும் விஜயின் உறவினரான சேவியர் பிரிட்டோ இருவரும் இணைந்து தயாரிக்க உள்ளார்களாம்.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் என்ற நிறுவனம் மூலம் தற்போது 5 படங்களை தயாரித்து வரும் ஐசர் கே.கணேஷின் அலுவலகங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...