விஜயின் ‘திருப்பாச்சி’ மூலம் இயக்குநராக அறிமுகமான பேரரசு, தொடர்ந்து ’சிவகாசி’, ‘திருப்பதி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இவரது படங்கள் அனைத்தும் ஊர் பெயர்களாகவே இருப்பது இவரது தனி சிறப்பாகும்.
படம் இயக்குவதோடு, பாடல் எழுதுவது நடிப்பது என்று பன்முக திறன் கொண்ட பேரரசு, கடந்த 2015 ஆம் ஆண்டு ‘சாம்ராஜ்யம் 2’ என்ற மலையாளப் படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் இயக்காமல் இருப்பவர், வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான சிகரம் டாக்டர்.ஆர்.சந்திரசேகர், ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, மோகன் ராஜா, பொன்ராம் ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “இங்கு நாங்கள் ஒரு கோவில் பூசாரியாக தான் இருக்கிறோம். கடவுள் ஆர்.சந்திரசேகர் தான். எப்படி கோவிலில் கடவுளின் பெயரை சொல்லி பூசாரிகள் விபூதி கொடுப்பார்களோ, அதுபோல் சந்திரசேகர் சாரின் பணத்தை நாங்கள், பூசாரிகளாக இங்கு மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். இந்த பாராட்டு, வாழ்த்து அனைத்தும் அவருக்கு தான் போய் சேர வேண்டும்.” என்று பேசினார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...