Latest News :

ஈழ பின்னணியில் உருவாகி ’யு’ சான்றிதழ் பெற்ற ‘சினம்கொள்’
Saturday May-18 2019

படம் எடுப்பது ஈஸியாக இருந்தாலும், எடுத்த படத்தை முழுமையாக தியேட்டருக்கு கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. அதில் முதலாவது சென்சார் குழுமம். நாம் என்னதான் கற்பனை செய்து காட்சிகளை வைத்தாலும், தணிக்கை குழுவின் கருத்துக்கு எதிராக அது இருந்தால் வெட்டப்பட்டு விடும். அதிலும், ஈழப் பின்னணி படம் என்றால் சொல்லவே வேண்டாம், சான்றிதழ் கிடைப்பதே குதிரை கொம்பு தான். அப்படி ஒரு நிலையை மாற்றியிருக்கிறது ‘சினம்கொள்’.

 

ஆம், ஈழ பின்னணியில் உருவாகி ‘யு’ சானிறிதழ் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது ‘சினம்கொள்’.

 

தணிக்கை குழுவில் 'யு' சான்று கிடைத்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜோசஃப், மேலும் சிங்கள தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதால் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார்.

 

கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் தனது ‘சினம்கொள்’ படம் பற்றி கூறுகையில், “இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் முற்றிலும் படம்பிடிக்க நாங்கள் முடிவு செய்தோம். அப்போது தான் ரசிகர்கள் அந்த தளத்திற்கு நெருக்கமாக அனுபவத்தை உணர முடியும் என நினைத்தோம்" எனக்கூறும் இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப் இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொள்கிறார். 78 பேர் கொண்ட மொத்த படக்குழுவும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு பயணித்திருந்தது. உண்மையில், சில தொழில்நுட்ப கலைஞர்கள் சிங்களர்களாக இருந்தனர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். இத்தகைய விஷயங்கள் இந்த படத்திற்கு ஒரு உண்மையான வரம்.

 

போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஒரு நபர் (ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன்), அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த சினம் கொள் திரைப்படம் தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருக்கிறது.” என்றார்.

 

தமிழகம், ஐரோப்பா, கனடா ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்களின் நிதி மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் தேசிய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Related News

4887

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

”பயம் கலந்த சந்தோஷத்துடன் தான் சம்மதித்தேன்” - மனம் திறந்த நடிகர் அதர்வா
Saturday November-16 2024

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...

“சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்” - இயக்குநர் என்.ராஜசேகர்
Friday November-15 2024

7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் என்...

Recent Gallery