தமிழ் சினிமாவையும் கடந்து பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற தனுஷ், பிரெஞ்ச் - ஆங்கிலப் படமான ‘எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ என்ற சர்வதேச திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இப்படத்தை தழுவி தற்போது தமிழில் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது.
கென் ஸ்காட் இயக்கத்தில், அமித் திரிவேதி பாடல்களை இசையமைத்து வழங்க, பின்னணி இசைக்கு நிகோலாஸ் எறேரா பொறுப்பேற்று இருக்கிறார். மதன் கார்க்கி– தமிழ் லாசிரியராக பணிபுரிந்திருக்கிறார்.
இப்படத்தை ஒய்நாட் எக்ஸ் (YNOTX) நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இது குறித்து YNOTX சஷிகாந்த் கூறுகையில், “இந்த குறிப்பிடத்தக்க கதையை தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை பெற்ற இத்திரைப்படம், தனுஷின் திரை ஆளுமை, திரைப்படத்தின் கருத்துடன் இணைந்து, இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான அவதாரத்தில் அவர் நடித்திருக்கும் விதம், சினிமா ரசிகர்களுக்கும், தனுஷின் ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக அமையும் என்பதில் ஒரு எங்களுக்கு மாபெரும் மகிழ்ச்சி.” என்றார்.
நடிகர் தனுஷ் கூறுகையில், “’எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதை என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” என்றார்.
கோல்டன் ரேஷியோ நிறுவனத்தின் சி.ஈ.ஓ அபயானந்த் சிங் கூறுகையில், “கோல்டன் ரேஷியோ இத்தகைய சர்வதேச வெளியீடுகள் கொண்ட ஒரு திரைப்டத்துடன் தன்னை இணைத்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. திரைபடங்களுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. YNOTX உடன் இணைந்து செயல்படுவது இத்திரைபடத்தை பறந்து விரிந்த இந்திய திரை ரசிகர்களை சென்றடைய ஒரு ஆகச்சிறந்த வழியாக கருதுகிறோம்”. என்றார்.
இயக்குநர் கென் ஸ்காட் கூறுகையில், “எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஒப் தி ஃபகீர்’ ஒரு இகியா துணி அலமாரியில் அடைபட்டு கிடக்கும் ஒரு பகீரின் நீதிக்கதை. இக்கதை வாய்ப்புகள், கர்மா, மற்றும் சுயவிருப்பங்களை மையமாக கொண்டது. இது மும்பையில் வசிக்கும் ஒரு அண்டை வீட்டு சிறுவன், தன்னை அறியும் நோக்கில் ஐரோப்பாவை சுற்றி வந்த ஒரு எச்சரிக்கை கதை.
இந்த இதயப்பூர்வமான காமெடி திரைப்படத்தை படமாக்கும் தருணம், பல திறமையான இந்திய நடிகர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் தனுஷ் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுவதை அழகைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அதை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவர் காமெடி டச்சுடன் ரசிகர்களை ஈர்க்கும் விதம் அலாதியானது”. என்றார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த ‘பக்கிரி’ வரும் ஜூன் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...