இந்திய சினிமா என்றாலே பாலிவுட் சினிமா தான் என்ற நிலையை தற்போது தென்னிந்திய சினிமாக்கள் மாற்றியுள்ளது. பாலிவுட் சினிமாக்களுக்கு நிகரான பிரம்மாண்டமாக மட்டும் இன்றி, நல்ல கதையம்சம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல படங்கள் தொடர்ந்து வெளியாவதும் ஒரு காரணம்.
இதற்கிடையே, தென்னிந்திய திரைப்படங்களை கவனமாக பார்த்து வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலர், அப்படங்களை இந்தியில் ரீமேக் செய்வதிலும் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சமீபத்டில் கூட, ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘காஞ்சனா’ படத்தை அக்ஷய் குமார் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
இந்த நிலையில், தென்னிந்தியாவின் டாப் வசூல் ஹீரோக்கள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரூ.500 கோடியை வசூல் செய்த முதல் தென்னிந்திய ஹீரோ, ரூ.250 கோடியை அதிகம் முறை வசூலித்த ஹீரோ என்ற தலைப்பில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், ‘பாகுபலி’ படம் மூலம் ரூ.500 கோடி வசூலை தாண்டிய ஓரே தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பிரபாஸ் பெறுகிறார். வேறு எந்த தென்னிந்திய நடிகர்களின் படமும் ரூ.500 கோடியை வசூலிக்கவில்லை.
அதே போல் ரூ.250 கோடி வசூலை தொடர்ந்து இரண்டு முறை கடந்த ஒரே தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றிருக்கிறார். ரஜினியின் ‘2.0’ படம் இந்த அளவுக்கு வசூலித்திருந்தாலும், ரஜினியின் அதற்கு முந்தைய படமான ‘காலா’ ரூ.160 கோடி மட்டுமே வசூலித்ததால், ரஜினிக்கு கூட இந்த பெருமை கிடைக்கவில்லை.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...