பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. தமிழக தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை மக்கள் எதிர்ப்பார்த்தது தான் நடக்கின்றது என்றாலும், இந்திய அளவில் கிடைத்திருக்கும் முடிவு மக்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கிய ஓட்டுக்கள் எண்ணிக்கையும் அரசியல் பிரபலங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தென்சென்னை தொகுதியில் இந்திய குடிரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், எந்தவித பிரசாரமும் செய்யாமல், ஒரு சில தொலைக்காட்சிகளுக்கு மட்டும் தான் தேர்தலில் நிற்பதை தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் பவர் ஸ்டாருக்கு 425 வாக்குகள் கிடைத்துள்ளது. இந்த தொகுதியில் இவரை விட குறைவாக ஒருவர் 277 வாக்குகள் பெற்றுள்ளதால் பவர்ஸ்டார் கடைசி இடத்தில் இருந்து தப்பித்துள்ளார்.
இருப்பினும், எந்தவித பிரசாரமும் செய்யாமல் பவர் ஸ்டார் சீனிவாசன் 425 ஓட்டுக்கள் வாங்கியுள்ளது அரசியல் பிரபலங்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளதாம்.
இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 3,54,569 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை அடுத்து அதிமுக வேட்பாளரும் அமைச்சர் ஜெயகுமாரின் மகனுமான ஜெயவர்தன் 1,95,435 வாக்குகள் பெற்றுள்ளார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...