Latest News :

டாப்ஸியின் ‘கேம் ஓவர்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Sunday May-26 2019

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான டாப்ஸி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது பாலிவுட்டின் முக்கியமான நடிகையாக இருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் டாப்ஸி, சிறு இடைவெளிக்குப் பிறகு ‘கேம் ஓவர்’ படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

 

நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கும் இப்படத்தை ஒய்நாட் ஸ்டிட்யோஸ் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரித்திருக்கிறார்.

 

சஸ்பென்ஸ் திரில்லர் படமான இப்படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், படத்தை ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் கூறுகையில், “தமிழ் ரசிகர்களுக்காக ‘கேம் ஓவர்’ எனும் வித்தியாசமான கதைகளத்துடன் ஒரு திகில் படத்தை வெளியிடுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். நயன்தாரா நாயகியாக நடித்த அஷ்வின் சரவணனின் முதல் படைப்பான மாயா(2015) திரைப்படத்தின் வணிகரீதியிலான மகத்தான வெற்றி மற்றும் சிறப்பான விமர்சனங்களுக்கு பின், வரையறைகளை பின்னுக்குத் தள்ளி, முற்றிலும் வித்தியாசமான கதைகளத்துடன், கேம் ஓவர் ஒரு முன்னோடி முயற்சியாக உருவாகியிருக்கிறது.” என்றார்.

 

மீண்டும் தமிழ்ப் படத்தில் நடித்தது குறித்து கூறிய டாப்ஸி, “டாப்சீ பண்ணு பேசும் போது, ‘கேம் ஓவர்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருவதில் உற்சாகமாகமடைந்துள்ளேன். இந்த திரைப்படத்தின் கதையை கேட்ட உடனேயே, அதிலும் குறிப்பாக, இயக்குனர் அஷ்வின் சரவணன் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் கூட்டணியோடு, பறந்து விரிந்த  ரசிகர்களை ஈர்க்க வல்ல கதையும் இணைந்திட, எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது.  மிகச்சில திரைப்படங்களே எதிர்பார்ப்புகளை தாண்டி வெற்றி பெறும். அதில் இதுவும் ஒன்று. நான் தேர்ந்தெடுத்து நடிக்கும் இது போன்ற கதைகள்-கதாபாத்திரங்கள், ரசிகர்கள் என் மீது வைத்ததிருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்”. என்றார்.

 

இயக்குநர் அஷ்வின் சரவணன் படம் குறித்து கூறுகையில், “மாயா இன்று வரை மக்கள் மனதில் ஞாபகத்தில் இருக்கிறது, இன்றும் விரும்பப்படுகிறது என்றால் அது ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் ஒரு படைப்பாளிக்கு வலுசேர்த்து, ஒரு கதையை செதுக்குவதற்கான கால இடைவெளியை தருகிறது.  நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்பட வெளியீட்டை எதிர்நோக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக YNOT ஸ்டுடியோஸ் கருத்து உள்ளடக்கத்துடன் கூடிய திரைப்படங்களை ஊக்குவித்து வருகிறது. அவர்களது இந்த ஒத்துழைப்பும், ஊக்குவித்தலும் இல்லாமல் ‘கேம் ஓவர்’ இன்று இந்த இடத்தில் இருந்திருக்காது. டாப்சீ பண்ணு இப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் என்றே நம்புகிறேன். கேம் ஓவர் வெளியீடு மற்றும் வரவேற்ப்பை எதிர்நோக்கி ஆவலோடு இருக்கிறேன்.” என்றார்.

 

டாப்சி கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் வினோதினி, ரம்யா, சஞ்சனா நடராஜன், அனீஸ் குருவில்லா, மாலா பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரான் இதான் யோஹான் இசையமைக்க, ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பு செய்கிறார். ரியல் சதீஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சிவசங்கர் கலையை நிர்மாணிக்கிறார். அஷ்வின் சரவணனுடன் இணைந்து காவ்யா ராம்குமார் இப்படத்தின் கதை எழுதியிருக்கிறார்.

Related News

4951

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery