சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் தற்போது நடிகை கஸ்தூரி தான் நம்பர் ஒன். எந்த விஷயமாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களை விமர்சனம் செய்தே தன்னை பிரபலப்படுத்திக் கொள்பவர், நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதிலும் முதல் ஆளாக இருக்கிறார்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் நெட்டிசன்களிடம் கேவலமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது என்றும், இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது என்றும், அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.” என்று அதில் தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினின் இந்த கருத்தை கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட கஸ்தூரி, “இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல" - மு.க.ஸ்டாலின் அட ஆமாம், கோவா குஜராத் கர்நாடகம் ஒடிஷா வடகிழக்கு காஷ்மீர், வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் , ஏன், ஆந்திராவும் இந்தியாதான் ! இதை திரு ஸ்டாலின் தானாகவே மனமுவந்து சுட்டிக்காட்டுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.” என்று அதில் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரியின் இந்த கிண்டலான பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் அவரை கடுமையாக விமர்சித்து வருவதோடு, சில ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டி வருகிறார்கள்.
"இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல" - மு.க.ஸ்டாலின்
— Kasturi Shankar (@KasthuriShankar) May 27, 2019
அட ஆமாம், கோவா குஜராத் கர்நாடகம் ஒடிஷா வடகிழக்கு காஷ்மீர் வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் , ஏன், ஆந்திராவும் இந்தியாதான் ! இதை திரு ஸ்டாலின் தானாகவே மனமுவந்து சுட்டிக்காட்டுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை !
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...