இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடியின் பதவி ஏற்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்துக்கொள்கிறார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும்.
இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன்.
தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.
ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை. எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக கூறிய நித்ன் கட்கரிக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள்.” என்று தெரிவித்தார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...