கார்த்திக் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘மெட்ராஸ்’ படத்தில் மறக்க முடியாத பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதில் முக்கியமான வேடமாக மக்கள் மனதில் இடம்பிடித்த வேடம் ‘ஜானி’. யாரை பார்த்தாலும் ஜானி என்று அழைத்துக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு பித்து பிடித்தவரைப் போல அந்த வேடத்தில் நடித்து அசத்தியவர் ஹரி கிருஷ்ணன்.
’மெட்ராஸ்’ படத்தை தொடர்ந்து ‘கபாலி’, ‘வடசென்னை’, ‘சண்டைக்கோழி 2’, ‘பரியேறும் பெருமாள்’ என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஹரி கிருஷ்ணன், ’சிறகு’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம் கொண்ட இப்படம் சென்னையில் தொடங்கி, கன்னியாகுமரி வரை நீள்கிறது. இயந்திரங்களாக மனிதர்கள் மாறிய இக்காலக்கட்டத்தில் புத்துணர்வை கொடுக்கும் இயற்கையோடு இணைந்த பயணமும், இசையுமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக அக்ஷிதா நடிக்கிறார். இவர் நடனம் மற்றும் யோகாவில் தேர்ச்சி பெற்றவர். இவர்களுடன் டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். காளி வெங்கட் நட்புக்காக நடித்திருக்கிறார்.
ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். அருண் குமார் வி.எஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
திரைப்படத்துறையில் எக்சிகியூடிவ் தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பல நிறுவனங்களில் பணியாற்றிய மாலா மணியன்,தனது ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ் (FIRST COPY PRODUCTIONS) நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க, கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி, இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...