ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘96’. முழுக்க முழுக்க காதல் கதையான இப்படத்தில் கோவிந்த் வசந்தாவின் இசையும் பேசப்பட்டது. படத்தில் கோவிந்த் வசந்தாவின் இசையோடு, இளையராஜாவின் பழைய பாடல்கள் சில பயன்படுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் இளையராஜாவிடம் கேட்டதற்கு, “இது தவறான செயல், அப்போதைய காலக்கட்டத்திற்கு ஒரு பாட்டு தேவை என்றால், படத்தின் இசையமைப்பாளர் தான் போட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு என் பாடலை போட்டது நியாயம் இல்லை. இது ஆண்மை இல்லாத செயல்” என்று பெரும் கோபத்தோடு பதில் அளித்தார்.
இளையராஜாவின் கோபம் நியாயமானதாக இருந்தாலும், அவரது வார்த்தை தவறாக இருப்பதாக பலர் இளையராஜாவின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ‘96’ படக்குழு இது குறித்து எதுவும் பேசாமல் இருந்தன.
இந்த நிலையில், ‘96’ பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, இது குறித்து முதல் முறையாக பேசியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றை வயலின் இசைக்கருவி மூலம் வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதனுடன், ”என்னவானாலும் இளையராஜாவின் ரசிகன் தான்” என்றும் பதிவிட்டுள்ளார்.
தன்னை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தாலும், கோவிந்த் வசந்தாவின் பெருந்தன்மையான இந்த பதிவுக்கு அவர் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...