நடிப்பதில் இடைவெளி ஏற்பட்டாலும், ஏதாவது ஒரு வழியில் ரசிகர்களிடம் தினமும் பிரபலமாகவே இருப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவரது காமெடிக் காட்சிகளுக்கு சானியர்கள் முதல் சாதித்தவர்கள் வரை அடிமை என்றே சொல்லலாம்.
வடிவேலுவின் ஹைலைட் காமெடி காட்சிகளில் ஒன்றான ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் இடம்பெற்ற சுத்தியல் காமெடி நேற்று உலக அளவில் டிரெண்டிங்காகியுள்ளது. நேசமணி என்ற அவரது கதாபாத்திர பெயருடன் உலகம் முழுவதும் டிரெண்டிங்கானதும் இது குறித்து பிபிசி-யில் கூட செய்தி போட்டுவிட்டார்கள். அத்துடன், ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவிடன் நடித்த ரமேஷ் கண்ணா, சார்லி ஆகியோரை மீடியாக்கள் வளைத்து வளைத்து பேட்டி எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நேசமணி விவகாரம் குறித்து பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் வடிவேலு, “இது எல்லாத்துக்கும் இயக்குநர் சித்திக் தான் காரணம். அவர் உருவாக்கிய கதாபாத்திரம் தான் நேசமணி. படப்பிடிப்பின் போது எனக்கு தோன்றும், சிறு சிறு ஐடியாக்களை அவரிடம் சொல்வேன், அனைத்துக்கும் ஓகே வடிவேலு, என்று பெருந்தன்மையோடு சொல்லி என்னை சுதந்திரமாக நடிக்க விடுவார்.” என்றவர், தனக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் சதி நடப்பதாக கூறி வருத்தமும் பட்டிருக்கிறார்.
நடிகர் சங்க விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிய வடிவேலு, “நான் வாழக் கூடாது, என்னை அழிக்கனும், சாகடிக்கணும்னு தயாரிப்பாளர் சங்கத்துல முடிவு பண்ணிட்டாங்க. ஏன் இப்படி செய்றாங்கனு தெரியல. அதைப் பற்றி நான் கவலையும் படல. சினிமாவுல எனக்கு கிடைத்த இடைவெளி கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். என் மகனுக்கும், பொண்ணுக்கும் கல்யாணம் முடிச்சி, செட்டிலாக்கிட்டேன். என் கடமையை முடிச்சிட்டேன். இனிமே சினிமாவுல நடிக்கிறது கடவுள் கையிலதான் இருக்கு.” என்று தெரிவித்துள்ளார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...