‘பாகுபலி’ படம் மூலம் இந்திய சினிமா அரசிகர்கள் அனைவரையும் குஷிப்படுத்திய பிரபாஸ், பிறந்தநாள் பரிசு ஒன்றின் மூலம் நடிகர் விக்ரம் பிரபுவை குஷிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த பரிசு விக்ரம் பிரபுக்கானதல்ல, அவரது மகன் விராட்டுக்கானது.
பாகுபலி படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் கதை தொகுப்புகள் காமிக்ஸ் வடிவத்திலும், படத்தில் பயன்படுத்தப்பட்ட சில உடைகள் பாகுபலி பெயரோடு வியாபரத்திற்கும் வந்துள்ளது. அதுபோல, பாகுபலி படத்தில் ஹீரோ பிரபாஸ் பயன்படுத்திய வாள், அனுஷ்கா பயன்படுத்திய கத்தி, ராணா பயன்படுத்திய கதை உள்ளிட்டவை குழந்தைகளின் விளையாட்டு பொருட்களாக பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
துபாயைச் சேர்ந்த பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தோடு பாகுபலி குழுவினர் ஒப்பந்தம் போட்டு இப்பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள். ஆன்லைனின் அமோகமாக விற்பனையாகி வரும் இந்த பொருட்கள் தான் தற்போது பொடிசுகளின் பேவரைட் விளையாட்டு சாதனங்களாக உள்ளது.
இந்த நிலையில், பாகுபலி வாள் மீது நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டுக்கும் கொள்ளை பிரியமாம். தனது பிறந்தநாள் பரிசாக அப்பா விக்ரம் பிரபுவிடம் பாகுபலி வாளை விராட் கேட்டிருக்கிறார். மகனின் ஆசையை பிரபாஸுக்கு விக்ரம் பிரபு தெரியப்படுத்த, உடனே தனது கையெழுத்து போட்டு, பாகுபலி வாள் ஒன்றை பிரபாஸ் கூரியர் மூலம் விராட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வாளை பார்த்து விராட் எவ்வளவு சந்தோஷப்பட்டாரோ, அதைவிடவும் விக்ரம் பிரபு அதிகமாகவே சந்தோஷப்பட்டாராம். காரணம் தனது மகன் ஆசைப்பட்ட பாகுபலி வாளை, அந்த பாகுபலியே பரிசாக கொடுத்ததற்காக.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...