‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதற்கிடையே, இயக்குநர் அட்லீ விஜயிடம் கூடுதலாக கால்ஷீட் கேட்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் முதல் பாடலுக்கான வேலையை ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ‘தளபதி 63’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். இதற்காக ‘தளபதி 63’ படத்தின் ஆடியோ உரிமையை ஏ.ஜி.எஸ் நிறுவனம் ரூ.5 கோடிக்கு விலை பேசி வருகிறதாம். அந்த பணத்தை அப்படியே ரஹ்மானுக்கு சம்பளமாக கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறதாம்.
விஜயின் ‘சர்கார்’ படத்தின் ஆடியோ உரிமையை ரூ.2.5 கோடிக்கு வாங்கிய சோனி நிறுவனத்திடம் தான் தற்போது ‘தளபதி 63’ படத்தின் ஆடியோ உரிமைக்கான பேரமும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ரஹ்மானின் ரூ.5 கோடி சம்பளம் குறித்து அறிந்த திரையுலம் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பதோடு, தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையின் விலை ரூ.5 கோடி என்பதை அரிந்து பேரதிர்ச்சியாகியுள்ளார்களாம். காரணம், ஆடியோ ரைட்ஸே இத்தனை கோடி விலை என்றால், படத்தின் சாட்டிலைட் உரிமை எவ்வளவு போகும் என்பது தான் அவர்களது எண்ணம்.
மொத்தத்தில், ‘தளபதி 63’ படத்தின் வியாபாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறதாம்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...