சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,தவறான பிளாஸ்டிக் பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும், சென்னையைச் சுத்தமாக்கவும் ,சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 'நம்ம சென்னை' என்கிற தன்னார்வலர் அமைப்பு 'இயற்கையோடு இணைவோம்' என்கிற ஒரு முன்னெடுப்பை நடத்தியது.
சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், அருணா ராஜ் மற்றும் திருமதி அனிதா ராஜலட்சுமி, அவர்கள் தலைமையிலும் இந்த முன்னெடுப்பு நடத்தப்பட்டது..
நமக்கு எல்லாமும் கொடுத்த இந்த சென்னை மாநகரத்திற்கு நாம் என்ன கொடுத்திருக்கிறோம்?
வெறும் குப்பைகளும் கழிவுகளும் மாசுகளும் மட்டும்தானா? யோசிக்க வேண்டாமா? எதிர்காலத் தலைமுறையினருக்கு நம்ம சென்னையை இப்படியேதான் நாம் விட்டுச் செல்ல வேண்டுமா?
வருங்காலத் தலைமுறைக்கு நாம் படிப்பு, வசதி, கார் வீடு என்று கொடுத்தால் மட்டும் போதுமா?
ஆரோக்கியத்தைக் கொடுக்க வேண்டாமா?
நம்ம சென்னையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுற்றுச்சூழல் வளம் கொண்ட நகரமாக மாற்றும் முயற்சிக்கான தொடக்கமே இந்த 'இயற்கையோடு இணைவோம்' இயக்கம்.
ஜூன் 5ல் நம்ம சென்னை முன்னெடுத்த செயல்பாடுகள் பலவற்றில் ஒன்றாக பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள குப்பைகளை காலை 6 மணி முதல் 8 மணி வரை அகற்றும் பணியை செய்திருக்கிறார்கள் .இந்த தூய்மைப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கு பெற்றார்கள்.
மாலை 4 மணி முதல் 8 மணி வரை பசுமை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சுற்றுச்சூழலை வளர்ப்பது பற்றியும் நம்ம சென்னையைப் பசுமை நகரமாக மாற்றுவது பற்றியும் விவசாய உற்பத்தி ஊக்குவிப்புகள் பற்றியும் பேசப்பப்பது. .அதுமட்டுமல்ல ஏற்கெனவே பசுமைப் பணிகளில் சுற்றுச்சூழல் இயக்கங்களில் தன்னலம் கருதாது இயங்கி வரும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் நாயகர்களையும் ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மரம் நடுவிழா இயக்கமும் அக்னி கல்லூரியில் நூறு மரங்களை நட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த இயக்கத்தில் பல பிரபலங்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களும் இணைந்து "இயற்கையோடு இணைவோம்" என்கிற முழக்கத்தின் குரலை உரத்து ஒலிக்கச் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருமதி ஜெயஸ்ரீ - டெரஸ் கார்டனிங் , ஹரிஹரன் -ஸ்ரீ ஸ்வாமி ஆர்கானிக் பார்மிங் ,அருணா -வான் நிலா ஸ்கை ப்ரொடக்ஷன்ஸ், பிரசன்னா - பிரகிருதி பவுண்டேசன், திருமதி அருள்பிரியா - நம்ம பூமி பவுண்டேஷன், பூபேஷ் நாகராஜன் - இந்திரா ப்ராஜெக்ட்ஸ் , டாக்டர் அபிலாஷா - உளவியல் நிபுணர் , முருகேஷ் - லாலாஜி ஒமேகா இண்டர்நேஷனல் ஸ்கூல் ,திருமதி மாலதிகுருராஜன் -சமூக செயற்பாட்டாளர் , திருமதி லதா - பிஎம் எஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல், டாக்டர் ராஜலட்சுமி . சாதனா ஈவென்ட்ஸ் -நம்ம சென்னை, சரவணன் சந்திரன் - சமூக செயற்பாட்டாளர் ,ரகு- ஆர்கானிக் பார்மிங், அருள்தாஸ் - சமூக செயற்பாட்டாளர், மற்றும் நடிகர் நகுல் அவர் மனைவி ஸ்ருதி,ஆகியோர் நம்ம சென்னை முயற்சிக்கு கைகொடுத்து ஊக்குவித்தனர்.
அக்னி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அக்னீஸ்வர் ஜெயப்ரகாஷ் இந்த இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்து தன் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் சுற்றுச் சூழல் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...