விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘துப்பறிவாளன்’ வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருந்தாலும், தனது படத்தின் வேலைகளை விட்டுவிட்டு, தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸி அமைப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தையில் விஷால் ஈடுபட்டுள்ளார். இதற்காகத்தான் இன்று நடைபெற இருந்த ‘துப்பறிவாளன்’ பத்திரிகையாளர் சந்திப்பையும் விஷால் ரத்து செய்துவிட்டார்.
இப்படி படு பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் விஷால், போர போக்கில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று ஆன்லைன் மீடியா ஒன்றுக்கு விஷால் அளித்த பேட்டி ஒன்றில், பதவியில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றால், அந்த பதவி கிடைக்க வேண்டும் என்றால், அரசியலுக்கு வர வேண்டும் என்றால், நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன், என்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு விட்டாரா மனுஷன், ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்தால் உங்களது ஆதரவு யாருக்கு? என்ற கேள்விக்கு, “ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவரும் சினிமாவையும் தாண்டி சமூகத்தில் மதிப்புள்ளவர்கள். அவர்கள் முதலில் அரசியலுக்கு வரட்டும், அதன் பிறகு நான் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிக்கிறேன். அதே சமயம், எனக்கு கமல் சாரை ரொம்ப பிடிக்கும். அவரது தைரியமான பேச்சு, தப்பு நடந்தால் அதற்காக தைரியமாக குரல் கொடுப்பது, போன்ற விஷயங்களால் எனக்கு கமல் சாரை ரொம்ப பிடிக்கும். அவரை நான் ரொம்ப மதிக்கிறேன்.” என்று பதில் அளித்துள்ளார்.
ஆக மொத்தம், அரசியலை பொருத்தவரை ரஜினி, கமல் என்று வந்தால் தனது ஆதரவு கமலுக்கே, என்பதை விஷால் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...