Latest News :

அஜித் பாணியில் தனது வருகையை பதிவு செய்த டாப்ஸி!
Friday June-07 2019

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘காஞ்சனா 2’ படத்தோடு தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டிய டாப்ஸி, தற்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக இருப்பதோடு, ஆக்‌ஷன் ஹீரோயினாகவும் வலம் வருகிறார்.

 

இந்த நிலையில், நான்கு வருடங்களுக்கு பிறகு ‘கேம் ஓவர்’ (Game Over) என்ற படத்தின் மூலம் டாப்ஸி மீண்டும் தமிழிக்கு வருகிறார். இப்படம் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

 

நயன்தாரா நடிப்பில் வெற்றி பெற்ற ‘மாயா’ படத்தையும், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ள ‘இறாவாக்காலம்’ படத்தையும் இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) சார்பில் சஷிகாந்த், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

 

வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் டாப்ஸி, இயக்குநர் அஸ்வின் சரவணன், தயாரிப்பாளர் சஷிகாந்த், இசையமைப்பாளர் ரோன் ஈத்தேன் யோகன், ஒளிப்பதிவாளர் ஏ.வசந்த், படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின், கதையாசிரியர் காவியா ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

Game Over Press Meet

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாள சஷிகாந்த், “ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் எப்போதும் வித்தியாசமான படங்கள் தயாரிப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், ‘கேம் ஓவர்’ படம் மிகவும் வித்தியாசமான ஒரு படம். இதுபோன்ற ஒரு ஜானரில் இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை. இப்படம் இனி வரப்போகும் படங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். இயக்குநர் அஸ்வின் சரவணன், ஒரு யோசனை சொன்னார், அது வித்தியாசமானதாக இருந்தது. அதையே அவர் படமாக எடுத்த போது, இன்னும் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. டாப்ஸி இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

 

இயக்குநர் அஸ்வின் சரவணன் பேசுகையில், ”எனது முதல் படமான மாயா வெற்றியடைந்த போது கூட நான் சந்தோஷப்படவில்லை. ஆனால், எனது இரண்டாவது படத்தின் மீது தான் எனக்கு பெரும் ஆர்வமாக இருந்தது. அந்த அளவுக்கு ஒரு சிறப்பான படமாக மூன்று ஆண்டுகளாக இறவாக்காலம் படத்தை உருவாக்கினேன். ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆக தாமதமான போது அப்படியே இருந்துவிடாமல், ஒரு கதை எழுதினேன். அதை இசையமைப்பாளர் யோகனிடம் சொன்ன போது, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளுக்கு சப்போர்ட் பண்ணுவார்கள் என்றார். அதன்படி, நான் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை அனுகிய போது, சஷிகாந்த் சார் இந்த கதையை கேட்டு ஓகே சொன்னார். இதை கதை என்று சொல்வதை விட ஒரு ஐடியா என்று தான் சொல்ல வேண்டும். இதை கதையாக சொன்னால் யாருக்கும் புரியாது, ஆனால் இதை விஷுவலாக புரிந்துக்கொண்ட சஷிகாந்த் எனக்கு ரொம்பவே சப்போர்ட் பண்ணார். அவரது ஊக்கத்தினால் படம் ரொம்பவே சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.

 

டாப்ஸி பேசுகையில், “கேம் ஓவர் வித்தியாசமான முயற்சி என்பதைவிட ஒரு சோதனை முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு புதுமையான திரைக்கதை. இப்படத்தின் மூலம் நான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டேன். “ஐ ம் பேக்”” என்று அஜித் ஸ்டைலில் கூறினார்.

 

90 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என்று 1200 திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

5043

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

”பயம் கலந்த சந்தோஷத்துடன் தான் சம்மதித்தேன்” - மனம் திறந்த நடிகர் அதர்வா
Saturday November-16 2024

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...

“சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்” - இயக்குநர் என்.ராஜசேகர்
Friday November-15 2024

7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் என்...

Recent Gallery