இயக்குநர் கெளதம் மேனன் விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பிற்காக துருக்கி நாட்டுக்கு சென்ற இயக்குநர் கெளதம் மற்றும் அவருடைய படக்குழுவினர், அந்நாட்டு எல்லை படையினரும் சிக்கியுள்ளனர்.
இது குறித்து கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”நானும் என்னுடைய படக்குழுவினரும் துருக்கி நாட்டு எல்லையில் சிக்கிக்கொண்டும். 24 மணி நேரத்திற்கு மேலாக இங்கே இருக்கிறோம். படப்பிடிப்பு கருவிகள் உள்ளிட்டவைகளுக்கான அனுமதி கடிதம் இருந்தும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஜார்ஜியாவில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு சாலை வழியாக செல்லும் போது எங்களை பிடித்து வைத்துள்ளனர். எங்களிடம் படப்பிடிப்பு சாதனங்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் உடைகள் இருப்பது. தற்போது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலமாக இந்த பிரச்சினையில் இருந்து விடுபடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...