Latest News :

’இக்லூ’ சோகமான காதல் கதையா? - இயக்குநர் விளக்கம்
Saturday June-08 2019

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பரத் மோகன் இயக்கும் ‘இக்லூ’. (IGLOO) நேர்மறையான விஷயங்களைக் கொண்ட காதல் கதையாக உருவாகும் இப்படம் நேர்மறை சிந்தனைகளை பேசும் படமாகவும் உருவாகியுள்ளது.

 

இது குறித்து இயக்குநர் பரத் மோகன் கூறுகையில், “வாழ்க்கை எப்போதும் இனிமையாகவே இருப்பது இல்லை. சில நேரங்களில், அது நம்மை ஆழமான மனச்சோர்வு நிலையில் வைக்கிறது, குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நோய்களால். அந்த நோய்களை எதிர்த்து சண்டை போட மருத்துவ முன்னேற்றங்கள் வந்து விட்டன. ஆனால் மிகப்பெரிய ஆயுதம் என்பது நம் "நேர்மறை" சிந்தனைகள் தான். எமோஷனல் காதல் கதையான இந்த படமும் அப்படி ஒரு செய்தியை வலியுறுத்துகிறது. ஒரு அழகான ஜோடியின் வாழ்க்கை அபாயகரமான ஒரு வியாதியால் பாதிக்கப்படுகிறது, அவர்கள் அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை காட்டும் படம். இதை கேட்டு விட்டு இது ஒரு சோகமான காதல் கதையா எனக் கேட்டால் அதை நீங்கள் திரையில் தான் காண வேண்டும். நல்ல ஒரு கருத்தை இந்த தருணங்கள் மூலம் வெளிப்படுத்த முயற்சித்துள்ளோம். இந்த காரணத்திற்காக ரசிகர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெறும் என ஒட்டுமொத்த குழுவும் நம்புகிறோம்.

 

நாங்கள் இந்த படத்தை மிக யதார்த்தமாக காட்ட விரும்பினோம். சினிமா மிகைப்படுத்தல்களை தவிர்த்திருக்கிறோம். படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சிலவற்றால் ஈர்க்கப்பட்டு உருவானவை தான். அனைத்து கலைஞர்களும் அவர்கள் கதாபாத்திரங்களின் ஆழத்தை புரிந்துகொண்டு திறம்பட நடித்ததால், இது ஒரு சிறப்பான அனுபவம். முன்னணி கதாப்பாத்திரங்களில் அம்ஜத் கான் மற்றும் அஞ்சு குரியன் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். மேத்யூ வர்கீஸ், லிஸ்ஸி மற்றும் பக்ஸ் ஆகியோரும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். இரட்டையர்கள் அனிகா மற்றும் அரோஹி ஆகியோர் படத்தின் ஆரம்ப 25 நிமிடங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று.” என்றார்.

 

அரோல் கொரேலி தனது இனிமையான இசைப்பதிவுக்காக புகழ்பெற்றவர், இப்படத்தில் மூன்று பாடல்கள் உண்டு. அவரின் இசை இந்த படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குகன் எஸ். பழனி ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். சீனிவாசன் கலை இயக்குனராகவும், பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

Related News

5050

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

”பயம் கலந்த சந்தோஷத்துடன் தான் சம்மதித்தேன்” - மனம் திறந்த நடிகர் அதர்வா
Saturday November-16 2024

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...

“சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்” - இயக்குநர் என்.ராஜசேகர்
Friday November-15 2024

7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் என்...

Recent Gallery