நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணியை எதிர்த்து போட்டியிடும் அணியில் தலைவர் பதவிக்காக கே.பாக்யராத் நிறுத்தப்படுகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அவரை நடிகர் சங்க உறுப்பினர் ஒருவர் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கும் கடிதம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது பெயரை குறிப்பிடாமல் அந்த உறுப்பினர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உயர்திரு பாக்யராஜ் அவர்களுக்கு,
இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் இந்திய அளவில் சாதித்தவர் நீங்கள். ஒரு நடிகராக சினிமாவிற்குள் நுழையும் எல்லோருக்கும் உதாரணம் நீங்கள் தான். சினிமாவில் நடிப்பதற்கு அழகோ நிறமோ முக்கியம் அல்ல, திறமை தான் முக்கியம் என்பதை நிரூபித்தவர் தாங்கள். கடந்த ஆண்டு சர்கார் பட கதை திருட்டு விவகாரத்தின் போது தான் தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்காக ஒரு சங்கம் இருப்பதே தெரிய வந்தது. அந்த பிரச்சினையை தாங்கள் கையாண்ட விதம் உங்கள் மீதான மதிப்பை உயர்த்தியது. சர்கார் படத்தை வாங்கிய தேனாண்டாளை பழி வாங்க தான் நிங்கள் அதை செய்ததாக சிலர் குறை சொன்னபோது, நாங்கள் நம்பவில்லை. காரணம் உங்கள் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை. ஆனால், தற்போது நீங்கள் நடிகர் சங்க தேர்தலில் நிற்பதாக எடுத்துள்ள முடிவு உண்மையில் தவறான முடிவு.
கடந்த பல ஆண்டுகளாக நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவி பிடியில் சிக்கி தவித்ததும் சங்க நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதும் எல்லோருக்கும் தெரியும். பூச்சி முருகன் போன்றோர் தனியாளாக அவர்களுக்கு எதிராக போராடினார்கள். அவர்களோடு விஷால், கார்த்தி என இளம் ஹீரோக்கள் ஒன்று இணைய ஏகாதிபத்தியத்துக்கு முடிவு கட்டப்பட்டது. அந்த தேர்தலிலேயே நீங்கள் பிரஸ் மீட் வைத்து ராதிகாவுடன் இணைந்து பேசினீர்கள். ஆனால் நியாயமாக பேசினீர்கள். நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அங்கு வரவழைக்கப்பட்டது உங்கள் பேச்சிலேயே தெரிந்தது.
நாசர், விஷால், கார்த்தி அணியினர் இந்த கட்டடத்தை உயர்த்த எந்த அளவுக்கு போராடினார்கள் என்பது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஒன்றுமே இல்லாமல் இருந்த இடத்தை ஒரு கட்டடமாக உயர்த்தி அதில் இருந்து வருமானம் ஈட்ட வழிவகை செய்துள்ளார்கள். அதோடு கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், மருத்துவம், இறப்பு என்று உறுப்பினர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியும் வருகிறது. சங்க கணக்கில் வெளிப்படைத்தன்மைக்காக இணையத்தில் கணக்கு வெளியீடு, நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக தனி இணையதளம் என்று இளம்படை திறமையான நேர்மையான நிர்வாகத்தை கொடுத்து இருக்கிறது.
கட்டடம் வளர்ந்து நிற்கும் நேரத்தில் அதில் பால் காய்ச்சி குடியேறி அந்த கட்டடத்தை வளைக்க தான் ஐசரி கணேஷ், சங்கீதா, உதயா கோஷ்டி தேர்தலில் நிற்கிறது. அந்த அணியில் இணைந்ததன் மூலம் விஷால், நாசர் அணி கட்டிய கட்டடத்தில் நீங்கள் சென்று அமர்ந்து சொந்தம் கொண்ட்டாட நினைக்கிறீர்களா? இது ஈனச்செயல் அல்லவா?
நீங்கள் தலைவராக மதிக்கும் எம்.ஜி.ஆரின் கனவனை நிறைவேற்றியவர்களை தோற்கடித்து அவர்கள் கட்டிய கட்டடத்தில் அமர்ந்து சொந்தம் கொண்டாட நினைக்கிறீர்களா? அப்படி என்றால் எம்.ஜி.ஆரின் ஆன்மா உங்களை மன்னிக்கவே மன்னிக்காது. இது எம்.ஜி.ஆரின் ஆன்மாவுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.
இப்படிக்கு
நடிகர் சங்க உறுப்பினர்களுள் ஒருவன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...