தமிழ் சினிமாவில் அவ்வபோது வெளியாகும் எதார்த்தமான காதல் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதோடு, காலத்தால் அழியாத காதல் படங்களாகவும் மாறிவிடுகிறது. அந்த வகையில், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல்’, ‘மைனா’ போன்ற பல படங்களை கூறலாம். அதே வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாயபிம்பம்’.
அறிமுக இயக்குநர் சுரேந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் உண்மையான யதார்த்தமான காதலை கூறுகிறது. உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என்று எந்த தடையும் இருக்காது. அதுபோல, காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய துணிவு வரும் என்பதையும் நிரூபிக்கும் வகையில் இப்படம் இருக்கும்.
இயக்குநருக்கு மட்டுமல்லாது நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல் படம் என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தரமான யதார்த்த காதல் சினிமாவை படைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பை கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் நடத்தியிருக்கிறார்கள்.
ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ்பாலா, அருண்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறாரகள். மாயபிம்பம் பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்.. காதலின் வலியை சொல்லும் எதார்த்த படம் மாயபிம்பம்.
கே.ஜே.சுரேந்தர் இப்படத்தை எழுதி இயக்கியதோடு 'செல்ஃப் ஸ்டார்ட் ப்ரொடக்ஷன்' சார்பில் தயாரித்துமிருக்கிறார். புகைப்படம் - எட்வின் சகாய், இசை - நந்தா, படத்தொகுப்பு - வினோத் சிவகுமார், கலை - மார்ட்டின் தீட்ஸ், நடனம் - ஸ்ரீக்ரிஷ், ஒலி - ஷான்சவன், டிசைன் - சந்துரு. உலகமெங்கும் V.T சினிமாஸ் வெளியீடு.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...