ஃபஸ்ட் காபி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மாலா மணியன் தயாரித்திருக்கும் படம் ‘சிறகு’. இப்படத்தின் மூலம் கவிஞர் குட்டி ரேவதி இயக்குநராக அறிமுகமாவதோடு, ‘மெட்ராஸ்’ படத்தில் ஜானி என்ற கதாபாத்தித்தில் நடித்து பாராட்டு பெற்ற ஹரி கிருஷ்ணன் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். ஹீரோயினாக அக்ஷிதா நடித்திருக்கிறார்.
அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. முன்னதாக இப்படத்தின் பாடல்கள் புரோமோ மற்றும் டீசரை இயக்குநர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் குட்டி ரேவதி பேசுகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் எதிர்ப்பார்ப்பதை தான் அரோல் கரோலியிடம் எதிர்ப்பார்த்தேன், அவரும் அதை சரியாக செய்துக் கொடுத்திருக்கிறார், என்று கூறி மகிழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள். வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்த நாளில் இசையை வெளியிட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை செய்வது போல செய்திருக்கிறார். நடிகர் ஹரி கிருஷ்ணன். நாங்கள் நினைத்த ஒரே ஹீரோ அவர்தான். ஹீரோயின் அக்ஷிதா நின்னு விளையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இந்தப்படத்திற்குப் பிறகு அவர் நெடுந்தூரம் பயணிப்பார் என்று நம்புகிறேன். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் கேரக்டர்களை நீங்கள் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு வாழ்வில் மிக முக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படி வரிசைப்படுத்தினால் அதை மாலா மணியன் அவர்கள் மூலமாகத் தான் துவங்க வேண்டும். சினிமாவில் இப்படியொரு ஆளைப் பார்ப்பது அரிது. இந்தப்படம் இருவரின் பயணம் தான். சரியாக திட்டமிட வேண்டுமென்பதையும் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும் என்பதையும் மாலா மணியன் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.” என்றார்.
இசையமைப்பாளர் அரோல் கரோலி பேசுகையில், “சிறகு எனக்கு பேவரைட்டான ஸ்ரிகிப்ட். கதையைப் படிச்சதும் ஒரு பயணம் போன மாதிரி இருந்தது. குட்டி ரேவதி மேடம் எழுத்து எப்படி ஸ்ட்ராங் என்பது எல்லோருக்கும் தெரியும். கேமராமேன் பெரிய வித்தைக்காரர். கலக்கி இருக்கிறார். ஹரி கிருஷ்ணன் அவர் நல்லா கவனிக்க வைக்கிறார். இந்தப்படம் நாம் இழந்த சில உணர்வுகளை வெளிப்படுத்தும். இந்தப்படம் மூலமாக ஏ.ஆர் ரகுமான் சாரையும், மணிரத்னம் சாரையும் சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.” என்றார்.
ஹீரோ ஹரி கிருஷ்ணன் பேசுகையில், “ரொம்ப சந்தோஷமான தருணமா இருக்கு. இந்த டீம் ரொம்ப சூப்பரான டீம். குட்டி ரேவதி மேடம் தான் இந்த வாய்ப்பை கொடுத்தாங்க. பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன். ஆனா பெண்கள் தான் ஸ்ட்ராங் என்பதை உணர்ந்து கொண்டேன். கேமராமேன் மிக அற்புதமாக உழைத்திருக்கிறார். அருண் எடிட்டிங் செம்மயாக வந்திருக்கிறது. இந்த விழாவின் நாயகன் அரோல் கரோலி அட்டகாசமாக மியூசிக் அமைத்து இருக்கிறார். இந்தப்படத்தில் இசை ரொம்ப முக்கியம். அதை சரியாகச் செய்திருக்கிறார்.” என்றார்.
ஹீரோயின் அக்ஷிதா பேசுகையில், “நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஹீரோ ஹரியோட நடித்தது நல்ல அனுபவம். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. அருவி படத்தின் இயக்குநர் தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்.” என்றார்.
தயாரிப்பாளர் மாலா மணியன் பேசுகையில், “இந்த விழாவுக்கு பெரிய வி.ஐ.பி-க்களை கூப்பிடாததிற்கு காரணம் இந்த டீம் புதியது. இவர்களை இந்த விழா நாயகர்களாக காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வேறு யாரையும் அழைக்கவில்லை. படத்தை முடித்ததும் மணிரத்னம் சாரிடம் ஒரு வார்த்தை தான் கேட்டேன். உடனே சரி என்று பாடலை வெளியீட்டார். ஏ.ஆர்.ரகுமான் சாரிடம் ரேவதி கேட்டார். அவரும் உடனே ஒப்புக்கொண்டார். இந்தப்படத்தை தேர்ந்தெடுக்க காரணம். சின்ன பட்ஜெட்ல வித்தியாசமான படமா இருக்கணும். அதே சமயம் நல்ல கதையா இருக்கணும்னு நினைச்சேன். சென்னையில் ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரைக்கும் படப்பிடிப்பு குறிப்பிட்ட டைம்ல எடுத்து முடிச்சோம். ஹரி, அக்ஷிதா, நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா எல்லாரும் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இந்தப்படம் எடுக்கும் போது ஒரே விசயத்தை தான் நினைத்தேன். இந்தப்படத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் மகிழ்வான நினைவாக இருக்க வேண்டும் என்று. அது அப்படியே நடந்துள்ளது.” என்றார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...