நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது இயக்குநராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
பல படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ‘அரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகியப் படங்களை தொடர்ந்து தற்போது ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்கியிருப்பதோடு, அப்படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் பாதிப்புகளை பின்னணியாக வைத்துக் கொண்டு, காதல் கதை ஒன்றை சொல்லியிருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகையாகவும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பல வெற்றிகளை பெற்றாலும், இயக்குநராக இருப்பதையே பெருமையாக நினைப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும், ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை தயாரித்தது தனது மிகப்பெரிய சாதனை, இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை நாங்கள் தயாரிப்போம் என்று நினைக்கவில்லை. இந்த படம் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்து ஒரு பைசா கூட வரவில்லை என்றாலும் எங்களுக்கு கவலையில்லை, காரணம், நாங்கள் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை. அதனால், நாங்கள் முதலீடு செய்த பணம் வரவில்லை என்றாலும் இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்போம், என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அப்போது, படம் வெற்றிப் பெற்று உங்களுக்கு அதிகமான பணம் வந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி கேட்டதற்கு, “அதிக பணம் வந்தால், தமிழ் சினிமாவில் இருக்கும் திறமையான உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதத்தில் பல தரமான படங்களை தயாரிப்பேன்.” என்று பதில் அளித்தார்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இந்த முடிவால் தமிழ்த் திரையுலக உதவி இயக்குநர்கள் பெரும் சந்தோஷமடைந்துள்ளார்கள்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...