பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கும் ரஜினிகாந்த், தமிழகத்தில் எந்த நேரத்த்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதில் போட்டியிட தான் தயார் என்று அறிவித்திருக்கிறார். அதே சமயம், அவர் தனது கட்சி பெயர் உள்ளிட்ட எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.
இதற்கிடையே, தூத்துக்குடி போராட்டத்தையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கடுமையாக விமர்சித்த ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளது. மேலும், மத்திய அரசின் திட்டங்களுக்கும், பிரதமர் மோடியில் அறிவிப்புகளுக்கும் உடனே வாழ்த்து தெரிவிக்கும் ரஜினிகாந்த், தமிழக பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசாமல் இருப்பதாலும், அவர் மீது தமிழகர்கள் கோவத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதற்காக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மற்று ரஜினிகாந்த் ரசிகர்கள், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தியுள்ளார்கள்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...