முழு நீளத்திரைப்படங்கள் நிகராக மக்களை கவர்ந்து வரும் குறும்படங்கள் குறுகிய நேரத்தில் மிகப்பெரிய விஷயத்தை சொல்லும் ஆற்றல் படைத்தவைகளாக இருக்கின்றன. இப்படி வெளியாகும் தரமான குறும்படங்கல் உலக அளவில் அங்கீகாரமும் பெறுகிறது.
அந்த வரிசையில், அமின் என்பவர் இயக்கியிருக்கும் ‘பாசிட்டிவ்’ என்ற குறும்படம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதோடு, பல விருதுகளையும் குவித்து வருகிறது.
காதலிக்கும் பெண் ஒருவர், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிடுகிறார். உடனே அவர் காதலனை திருமணம் செய்ய முயற்சிக்கும் போது பல தடைகள் வருகிறது. அதற்குள் கருவும் வளர, அப்பெண் கருக்கலைப்பு செய்ய முயற்சிக்கிறார். இதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்.
இந்த நிலையில், பெண்னின் வயிற்றிலிருக்கும் குழந்தை தாயின் கண் முன்னே தோன்றி “என்னை கொல்லாதே அம்மா” என்று சொல்வது போல அந்த பெண்னுக்கு தோன்ற, உடனே அவள் மனம் மாறுகிறாள். இவ்வாறான மனதை தொடும் கதைக்கொண்ட இந்த குறும்படம் 20 நிமிட படமாக உருவாகியுள்ளது.
கதையின் பாத்திரங்களாக ஸ்ரீ, ராஜா, பானு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜெயம் கொண்டான் ஒளிப்பதிவு செய்ய, கஜா தானு இசையமைத்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி அமின் இயக்கியிருக்கிறார். இவர் 50 க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியதோடு, பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
தாய்லாந்து நாட்டில் 300 குறும்படங்கள் பங்குபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘பாசிட்டிவ்’ குறும்படத்திற்கு Foriegn Language Award, Audience Online Award, Audience Stadium ஆகிய மூன்று விருதுகள் கிடைத்திருக்கிறது.
மேலும், தாய்லாந்து நாட்டில் இந்த குறும்படத்தை பார்த்த பல பெண்கள் கருகலைப்பு செய்யும் முடிவை கைவிட்டு மனம் திறந்தினார்களாம்.
இப்படி மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியதும் தனது குறும்படத்திற்கான விருது தான், என்று இயக்குநர் அமின் தெரிவித்திருக்கிறார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...