பிரபல நடிகையும், இயக்குநருமான விஜய நிர்மலா இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.
1950 ஆம் ஆண்டு வெளியான ‘மச்சரேகை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான விஜய நிர்மலா, தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததோடு, 1968 ஆம் ஆண்டு வெளியான ‘சிரித்த முகம்’, ‘பணமா பாசமா’, ‘சோப்பு சீப்பு கண்ணாடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 70 களில் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகையாக திகழ்ந்த இவர், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்தார்.
தமிழகத்தில் இவர் பிறந்தாலும், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்ததோடு, இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.
பெண் இயக்குநராக தெலுங்கு திரையுலகை கலக்கியவர், 49 திரைப்படங்களை இயக்கி, அதிகமான திரைப்படங்கள் இயக்கிய பெண் இயக்குநராக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தார்.
வயத் மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜய்அ நிர்மலா, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...