மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டது என்று திரையுலகினர் அவ்வபோது வருத்தப்பட்டாலும், அது தவறு, நல்ல படம் எடுத்தால் நிச்சயம் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள், என்பதை அவ்வபோது சில சிறிய படங்கள் நிரூபிக்கின்றன. அந்த வகையில், ‘8 தோட்டாக்கள்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான வெற்றியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜீவி’ படமும் அந்த வரிசையிலான படம் என்பதை நிரூபித்திருக்கிறது.
இப்படம் நாளை (ஜூன் 28) தேதி வெளியாகிறது என்றாலும், பத்திரிகையாளர்களுக்காக நேற்று சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படத்துடன், அப்படத்தில் ஹீரோ வெற்றியின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்கள்.
க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் படம் இருந்தாலும், முக்கோண விதி என்ற புதுவிதமான விஷயத்தோடு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையும், விதி மற்றும் மதி என இரண்டு விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளும்படியான காட்சிகளும் வெகுவாக கவர்ந்துவிட்டது. அதிலும், க்ளைமாக்ஸ் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களையும் கைதட்ட வைத்துவிட்டது.
மொத்தத்தில், இந்த ‘ஜீவி’ ஹீரோ வெற்றி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வெற்றிப் படமாக அமைவதோடு, தமிழ் சினிமா பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு படமாகவும் இருக்கும், என்று பத்திரிகையாளர்கள் பாராட்டியதோடு, இப்படி ஒரு திரைக்கதையம்சம் கொண்ட படம் இதுவரை தமிழ் சினிமாவில் வரவில்லை, என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...