Latest News :

களத்தில் இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்!
Sunday June-30 2019

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன், தனது தந்தையுடன் இணைந்து தனது இசைப் பயணத்தை தொடங்கியதன் மூலம் அவரும் இசையுலகில் களம் இறங்கியுள்ளார்.

 

சோனி மீயூசிக் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.அமீன் தனது முதல் இசைப் பதிவான சகோவை வெளியிட்டிருக்கிறார். அமீனின் குரலில் உருவான இப்பாடல் காதல் பற்றியும், நட்பைப் பற்றியும் பேசும் பாடலாக உள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, விவேக் மற்றும் ஏ.டி.கே ஆகியோர் இணைந்து வரிகள் எழுதியுள்ளனர்.

 

தனது தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து அமீன் தயாரித்திருக்கும் இப்பாடலின் முழு வீடியோவை அமித் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

 

அனைவரது உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இப்பாடல் குறித்து அமீன் கூறுகையில், “நான் என் இசைப் பயணத்தை சகோ உடன் தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன். இப்பாடலை தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், அதே சமயம் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது. மக்கள் என் பாடலைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன். ஓர் அன்பான வரவேற்ப்பை பெறுவேன் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் பாடல் குறித்து கூறுகையில், “ஒரு இசை அமைப்பாளராகவும் ஒரு இசை தயாரிப்பாளராகவும் நூற்றுக்கணக்கான பாடகர்கள் எனது பாடல்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட அவர்களின் பங்களிப்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வாழ்வை இசை வழியே மேம்பட செய்திருக்கின்றன. ஏ.ஆர்.அமீனுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு இப்பாடல் அனைத்து இசை ரசிகர்களின் உள்ளத்திலும் ஒரு தனி இடத்தை பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

அமீனின் இந்த முதல் பாடல் நிச்சயம் அவருக்கு சிறந்த பாடகர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும்.  மேலும் இனிவரும் அவரின் படைப்புகளும் ரசிகர்களிடையே  பெரிய எதிர்பார்ப்பினை  உண்டாக்கும். 

 

சோனி மியூசிக் நிறுவனத்தின் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் இப்பாடல் குறித்து பேசுகையில், “இது ஒரு விசேசமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம் எங்களுக்கு. இந்தக் குடும்பத்துடன் எங்களது உறவு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது - திரைப்படப் பாடல் இல்லாத ஏ ஆர் ரஹ்மானின் முதல் பாடலான வந்தே மாத்திரம் தொடங்கி, எண்ணிலடங்கா பாடல்கள் உட்பட இப்போது வெளிவந்திருக்கும் இந்த பாடல் வரைக்கும் நாங்கள் இணைந்து இருப்பது மகிழ்ச்சி.

 

அமீன்  ஒரு திறமை  வாய்ந்த கலைஞர் ஆவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. உலகிலேயே மிகச் சிறந்த இசைக் கலைஞரால் பயிற்சி அளிக்கப்பட்ட  அமீன், பிறந்ததில் இருந்தே இசையால் சூழப்பட்டு இருந்தவர்.அமீனின் இன்னிசை அவரது மனதில் இருந்து புறப்படுகிறது.

 

சகோவை நாங்கள் வெவ்வேறு தளங்களில் மார்க்கெட்டிங் செய்ய ஒரு பெரிய பரவலான மார்க்கெட்டிங் பிளான் வைத்துள்ளோம். அவரது இசை லட்சோப லட்சம் மக்களை உலகம் முழுவதும் சென்றடையும். அவருக்கு எல்லோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

 

தனித்தன்மை வாய்ந்த இப்பாடல், சோனி மியூசிக்கல் உருவாக்கப்பட்ட இசை தொடரான 7UP மேட்ராஸ் கிக் சீசன் 2 வின் கடைசிப் பாடலாக வெளியாகியுள்ளது.

Related News

5171

16 மொழிகளில் உருவாகும் விமலின் ‘பெல்லடோனா!
Sunday November-17 2024

யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

”பயம் கலந்த சந்தோஷத்துடன் தான் சம்மதித்தேன்” - மனம் திறந்த நடிகர் அதர்வா
Saturday November-16 2024

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...

Recent Gallery